/indian-express-tamil/media/media_files/2025/07/08/istockphoto-1281543304-612x612-1-2025-07-08-15-54-18.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-155529-2025-07-08-15-55-48.png)
தப்புத் தாளங்கள்
தப்புத் தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரிதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். கன்னடத்தில் தப்பித்த தல எனும் பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-155637-2025-07-08-15-56-58.png)
பாவ மன்னிப்பு
பாவ மன்னிப்பு 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-155741-2025-07-08-15-57-59.png)
முள்ளும் மலரும்
முள்ளும் மலரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-155900-2025-07-08-15-59-17.png)
புன்னகை
புன்னகை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-155957-2025-07-08-16-00-14.png)
கைதி கண்ணாயிரம்
கைதி கண்ணாயிரம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-160055-2025-07-08-16-01-15.png)
கணவனே கண்கண்ட தெய்வம்
கணவனே கண்கண்ட தெய்வம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன் ஆகியோரின் பாடல்களுக்கு ஏமந்தகுமார் இசையமைத்து பி. சுசீலா, பி. லீலா, கண்டசாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-160206-2025-07-08-16-02-22.png)
பழநி
பழநி 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-160254-2025-07-08-16-03-11.png)
எங்கேயோ கேட்ட குரல்
எங்கேயோ கேட்ட குரல் என்பது பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பஞ்சு அருணாசலம் தயாரித்த திரைப்படமாகும். கதை-வசனத்தை அவரே எழுதினார். திரைப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்க, இளையராஜா இசை அமைத்தார். இதில் ரஜனிகாந்த், ராதா, அம்பிகா, டெல்லி கணேஷ், கமலா காமேஷ் முதலானோர் நடித்தார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-160339-2025-07-08-16-03-58.png)
தெய்வமகன்
தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பண்டரி பாய் மற்றும் பலர் நடித்திருந்தனர். முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் தெய்வ மகன் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-160427-2025-07-08-16-06-03.png)
நவராத்திரி
நவராத்திரி 1964-இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைபடம் ஏ.பி.நாகராஜனால் இயக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் கதாநாயகனாகவும், சாவித்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைபடத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். 2008 -இல் தசாவதாரம் படம் வருவதற்கு முன்புவரை இதுவே உலக சாதனையாக இருந்தது. அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் சிவாஜி நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டதாக இப்படத்தை ஏ.பி.நாகராசன் இயக்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.