/indian-express-tamil/media/media_files/2025/04/30/6WNnKusPsVuIKYX3vK2y.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/30/kREQ88Z4RPxmXpK1AadY.png)
உப்பலமடுகு நீர்வீழ்ச்சி
உப்பலமடுகு நீர்வீழ்ச்சி (தடா அருவி , கம்பகம் அருவி) இது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டிக்கு வடக்கே அமைந்துள்ளது. புச்சிநாயுடு கன்ரிகா மற்றும் வரதையாபாளம் மண்டலத்தின் கீழ் வரும் இந்நீர்வீழ்ச்சி, சென்னையிலிருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும், ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து 35 கி.மீ (22 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/4uuBdj0TVNAq3MDTiDvH.png)
ஆரே நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை வழியாக இந்த நீர்வீழ்ச்சியை சென்றடையலாம். காலை 8 மணியில் இருந்து இந்த அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் 5 நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. நீச்சல் தெரிந்தால் அருவி கொட்டும் இடத்தில் உள்ள குளத்தில் நன்கு நீச்சல் அடிக்கலாம். இங்கு பார்க்கிங் வசதியும் உண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/ZKVizmuaHrF9Lvj0CDdE.png)
சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி
சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி, ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சி ஆகும். இது ஒரு வற்றாத நீர்வீழ்ச்சி, மேலும் கோனா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. சதாசிவ கோனா, அதன் நீர்வீழ்ச்சிகளுக்கும் சிவன் கோவிலுக்கும் பெயர் பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/8J1zVFXM3q88qmut8KKB.png)
கைலாசா கோனா நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருவள்ளூர் - நாகலாபுரம் வழியாக இந்த இடத்தை செல்ல முடியும். இங்கு மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒரு நீர்வீழ்ச்சியில் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும். வருடம் முழுக்க இங்கு தண்ணீர் ஆர்ப்பரிக்கும். அருகிலேயே சிவன் கோயிலும் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/xzEW6nZtEOTWgJISMDdE.png)
மூல கோண நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரம் திருவள்ளூர் - புத்தூர் வழியாக சென்றடைந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்குள்ள கோயிலுக்கு படிகள் உள்ளன. மூலிகை குளியல் அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.