/indian-express-tamil/media/media_files/2025/04/19/5cZHafTYJvB7eDnbMHVf.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/19/gt5QHDYlSLnydZL39Ei3.jpg)
கோடை விடுமுறை என்று வந்தாலே பலருக்கும் சுற்றுலா தான் முதலில் நினைவுக்கு வரும். தங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்ப பலரும் சுற்றுலா தலங்களை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு நீண்ட நாட்களுக்கு சுற்றுலா செல்ல முடியாதவர்கள் ஒரே நாளில் சென்று திரும்பக் கூடிய இடங்களை விரும்புகின்றனர். அந்த வகையில் கோவை சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சில முக்கிய இடங்களை இதில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/ZVHLJ8X6sA5cA3ACMDrk.jpg)
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அதிக நேரம் செலவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் லேக் சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு படகு சவாரியும் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/tbIn7bWpXWWhpayZZZGF.jpg)
அடுத்த இடத்தில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஜி.டி கார் மியூசியம் இடம்பெறுகிறது. கார், பைக் போன்று வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள், இந்த மியூசியத்தை கட்டாயம் விரும்புவார்கள். இங்கு ஏராளமான பழங்கால கார்கள் உள்ளன. இங்கு ஒரு நபருக்கான டிக்கெட் விலை ரூ. 150 ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/IM0nmzBWeYrELRZeElef.jpg)
திரைப்படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிராட்வே சினிமாஸுக்கு செல்லலாம். கோவையிலேயே இவர்களிடம் மட்டும் தான் எபிக் மற்றும் ஐமேக்ஸ் தரத்திலான திரைகள் உள்ளன. எனவே, திரைப்படம் பார்ப்பவர்களுக்கு புது விதமான அனுபவத்தை இந்த திரையரங்கம் கொடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/YDCLcvoRT8T4Ii4PelLb.jpg)
இது தவிர இயற்கையை அதிகமாக விரும்புபவர்களுக்கு கோவை வேளாண்மை கல்லூரியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா நல்ல தேர்வாக இருக்கும். இந்த இடம் பார்ப்பதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற உணர்வை கொடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/lezrT1IPGNrA3ikkBGT9.jpg)
மேலும், வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் கோவையில் இருக்கும் மிதக்கும் பாலத்திற்கு செல்லலாம். இந்த இடத்தை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். இந்த இடத்தில் நமது காலை எங்கு வைத்தாலும் மிதப்பதை போன்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us