/indian-express-tamil/media/media_files/2025/04/22/a4gMj9DajntdGSx6SQKu.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/22/enYOdxvKAx96SayFq5DH.jpg)
கோடை காலம் என்றாலே சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தோன்றும். குறிப்பாக, வயது மற்றும் பாலின பேதமின்றி எல்லோருக்குமே சுற்றுலா மீது அலாதி பிரியம் இருக்கும். புதிய இடங்களுக்கு சென்று காண வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் கேரளாவில் நீங்கள் கண்டுகளிக்க வேண்டிய சில முக்கியமான இடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/0aVBdrS2EhEt4adJ8qmM.jpg)
மூணாறு பகுதிக்கு சுற்றுலாவிற்காக வருபவர்கள் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு கட்டாயம் விசிட் அடிப்பார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான சிகரங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. நீலகிரி வரையாடுகளை இப்பகுதியில் அதிகமாக காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/QvxvbeKcqGKKqDd4RAea.jpg)
வரலாற்று ரீதியான இடத்தை பார்வையிட வேண்டும் என்று விரும்புபவர்கள், மூணாறில் உள்ள தேயிலை அருங்காட்சியகத்திற்கு செல்லலாம். இங்கு செல்வதன் மூலம் தேயிலையின் வரலாறு, சாகுபடி மற்றும் பதப்படுத்துதல் குறித்த ஆழமான புரிதல் உருவாகும். இந்த அருங்காட்சியகம், செழிப்பான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/JhueiKPeziCkOKyXAQJ9.jpg)
மூணாறில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள குண்டலா அணை ஒரு அழகிய சுற்றுலா தலமாகும். பெரியாறு மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை, மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. சில சமயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை இப்பகுதியில் காணலாம் என்று கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/XEbysrTx4Y1IjnLHwUxC.jpg)
மூணாறு அருகே செல்பவர்கள், 'தென்னிந்தியாவின் காஷ்மீர்' என்று அழைக்கப்படும் தேவிகுளத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். இப்பகுதிக்கு ஏராளமான இந்துக்கள் புனித யாத்திரை வருவதாகவும் கூறப்படுகிறது. இயற்கையின் அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த இடம் நிச்சயம் பிடிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/klLSqV39sbAT5ZM0BHQ4.jpg)
நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கு வளரா அருவி சரியான தேர்வாக அமையும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி, இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.