/indian-express-tamil/media/media_files/2025/04/21/vHsgDVsdstiLRIZ99Eig.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/21/t2dNMQGcIgQOlBpcSpJv.jpg)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று அனைவருக்கும் சுற்றுலா செல்ல பிடிக்கும். அந்த வகையில் இந்தக் கோடை காலத்தில் திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நீங்கள் சுற்றுல் செல்வதற்கு ஏற்ற சில முக்கியமான இடங்களை இதில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/JVcgxsWAi6HWjxDxPZKc.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், 18-வது கொண்ட ஊசி வளைவுகளை கடந்து சென்றால், சிறுமலை காப்புக் காடுகளை அடையலாம். மலைப்பாங்கான இடமாக இருப்பதால், இந்த இடம் எப்போதுமே குளுமையாக இருக்கும். எனவே, குளிர்ச்சியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பரிசீலிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/aFBK9Hg2dCLrxwvKoGVK.jpg)
அடுத்தபடியாக, திண்டுக்கல் அருகே இருக்கும் மன்னவனூர் ஏரி முக்கிய சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. இதன் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் காண்போர் கண்களைக் கவரும் வகையில் இருக்கும். நீர்நிலைகள் நிறைந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக மன்னவனூர் ஏரி இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/F8shVmoAR8D2cPFbdEY4.jpg)
சுற்றுலாவிற்கு ஆன்மிக தலத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், கட்டாயமாக பழனி முருகன் கோயிலுக்கு வருகை தர வேண்டும். இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலை, போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முருகனின் கோயில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/Q5GzUS7xy070D1nRzwq3.jpg)
வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பவர்கள், திண்டுக்கல் கோட்டையை பரிசீலிக்கலாம். இது கடந்த 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு மன்னரான முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. தற்போது, இதனை சுற்றுலா தலமாக தொல்லியல் ஆய்வுத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/D9XoI8PMlX8LpgJamXNI.jpg)
திண்டுக்கல்லில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானல் விளங்குகிறது. கொடைக்கானலுக்கு என்று தனியாக ஒரு அறிமுகம் தேவை இல்லை. ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க ஏற்ற இடமாக கொடைக்கானல் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.