/indian-express-tamil/media/media_files/2025/05/22/GhQuoNs7I9QaF7Gr3mbP.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/22/K87gvxRTpPGpzxpMc2Bi.jpg)
கோடை காலம் என்றாலே குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ஏராளம். அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சில முக்கியமான இடங்களை இந்தப் பதிவில் காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/nxVEp4MnrvhzSvtd7sp2.jpeg)
குற்றாலத்தின் உள்ளே 4 கிலோமீட்டர் சென்றால் ஐந்தருவியை அடையலாம். குற்றாலம் என்றதும் பெரும்பாலான மக்களின் நினைவிற்கு வருவது இதுவாக தான் இருக்கும். இது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஏற்ற இடமாக இருக்கும். குறிப்பாக, இங்கு குளித்து மகிழலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/kHWljJAEnhkqzNQmKLnG.jpg)
குற்றாலத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் சென்றால் மேக்கரை அணையை அடையலாம். இங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், இதன் இயற்கையான சூழலை எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு ரம்மியமாக தோற்றமளிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/mmFILJrYtRMtsokK9cZv.jpeg)
ஐந்தருவியின் நுழைவாயிலில் இருந்து இடது புறமாக சென்றால் எக்கோ பார்க் வந்துவிடும். இதன் உள்ளே செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு இருந்து பார்க்கும் போது, பொதிகை மலையின் அழகை கண்டு ரசிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/4ICK4vLRSavadcJ8lJOV.jpeg)
மேக்கரை அணையில் இருந்து அச்சன்கோயில் செல்லும் வழியில் கும்பாவுருட்டி அருவி இருக்கிறது. இப்பகுதி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறியப்படுகிறது. இந்தப் பாதை முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இருக்கும். புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த இடம் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/IefL9Y1sXHC9squiRPMM.jpg)
கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் வழியில் மணலார் அருவி அமைந்ந்துள்ளது. இந்த அணையும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இயற்கையான சூழலில் பொழுதை கழிக்க விரும்புபவர்கள் இப்பகுதியை தேர்வு செய்யலாம். இதுவும் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/hMccQS9KGqr7iNGbagCn.jpeg)
குற்றாலத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு செல்லும் வழியில் கண்ணுபுலிமெட்டு அணை இருக்கிறது. போட்டிங் செல்ல விரும்புபவர்கள் இந்த இடத்தை பரிசீலிக்கலாம். ஆனால், இங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/IuKF4qyUSuIMREfJodcF.jpeg)
கண்ணுபுலிமெட்டு அணைப்பகுதி அருகே கண்ணுபுலிமெட்டு அருவி உள்ளது. இந்தப் பகுதிக்குள் காரில் செல்ல முடியாது. சற்று தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கும். எனினும், இந்த அருவியில் குளிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/IKqIqOCkNPJyEFTywcw9.jpeg)
பழைய குற்றாலத்தில் இருக்கும் அருவிக்கும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். ஆனால், மழை பெய்யும் நாட்களில் பாதுகாப்பு கருதி இங்கு பொதுமக்களை அனுமதிப்பதில்லை. அருவிப் பகுதியை விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஏற்றதாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/gX85zFjp5QQ9xPbkqbHA.jpg)
மலையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அகஸ்தியர் அருவி பாபநாசத்திற்கு செல்லலாம். குற்றாலத்தில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் இங்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும். தாமிரபணி ஆறு உற்பத்தி ஆகும் அழகை இந்த இடத்தில் இருந்து காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.