சரும ஆரோக்கியம் எப்போதும் அவசியமானது. குறிப்பாக பெண்கள் இதில் அதிக அக்கறை கொள்வர். அந்த வகையில் வீட்டிலேயே எளிதாகவும், விரைவாகவும் செய்ய மஞ்சள் ஃபேஸ் பேக் சிறந்தது.
மஞ்சளில் குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி- ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இதில் சருமத்திற்கு பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பளபளப்பான சருமத்திற்கு 3 மஞ்சள் ஃபேஸ் பேக்; மஞ்சள் மற்றும் பால்: பால் மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு குறையும். தோல் எரிச்சல் இருந்தால் சரியாகும். தோல் பளபளப்பாகும்.
மஞ்சள் மற்றும் தேன்: முகத்தில் தேன் தடவுவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக முகப்பருவை போக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் தக்காளி: இந்த பேக் சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு உகந்தது. தக்காளியில் உள்ள லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் inflammation-ஐ குறைக்கிறது. மேலும், ப்ரீமெச்சூர் ஏஜெனிங்கை தடுக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.