/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131316-2025-07-12-13-21-57.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131310-2025-07-12-13-22-15.png)
இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட ராணுவ கோட்டைகளை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புராதான சின்னங்களை பெற்ற இந்தியாவின் 44வது அடையாளமாக மராத்தியர்களின் கோட்டைகள் மாறியுள்ளன. இதுபோக தமிழ்நாட்டில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131321-2025-07-12-13-22-15.png)
பாரிஸில் நடந்த பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024-25 சுழற்சிக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த கோட்டைகளானது, ராணுவ திட்டமிடல் மற்றும் கோட்டை கட்டிடக் கலையை எடுத்துரைக்கும் விதமாக கட்டப்பட்டவையாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131326-2025-07-12-13-22-15.png)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள இந்த கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. 1190ம் ஆண்டு தொடங்கி, ஆயிரத்து 240ம் ஆண்டில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131331-2025-07-12-13-22-15.png)
இந்த கோட்டையானது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்ததாக அரண் செய்யப்பட்டுள்ளது என, மராத்திய மன்னரான சிவாஜியாலேயே பாரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் செஞ்சிக்கோட்டை முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. இதனால், பல போர்களை கண்டபிறகும் கூட கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131339-2025-07-12-13-22-15.png)
செஞ்சிக் கோட்டையின் உள்ளே கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை அமைந்துள்ளன. இதுபோக எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், , சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் மற்றும் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131316-2025-07-12-13-21-57.jpg)
நாட்டின் மிகவும் பாதுகாப்பான கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக யுனெஸ்கோவின் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்து இருப்பதால், செஞ்சிக் கோட்டை மேலும் பிரபலமான சுற்றுலா தளமாக இனி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.