/indian-express-tamil/media/media_files/2025/04/19/9AwyZOYvawKJdqyduogC.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-104146-520760.png)
இந்தச் செடி சில இடங்களில் வேலிக்காப்பானாகவும், வீட்டுக்கு முன்புறம் கொசுக்களை தவிர்க்கவும் கிராமங்களில் வளர்க்கப்படுகிறது. உண்ணிச் செடியின் இலைகள் புதினா இலையைப் போல இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் சில இலைகளை பறித்து போட்டு நன்கு கொதிக்க வைத்து கொடுத்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-104053-452419.png)
உங்களுக்கு நல்லதொரு குளிர்ச்சியை தரும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையை சமமாக வைத்திருக்கும். இவை தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல அருமருந்தாகவும், தோலில் ஏற்படும் அரிப்பு, வீக்கம், அலர்ஜி, மற்றும் சொறி சிரங்கு, படர்தாமரை, என அனைத்திற்கும் இந்த இலையை மை போல அரைத்து தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும் என்பதும் பாட்டி வைத்தியம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-104045-947467.png)
அம்மை தழும்பு இருக்கும் இடத்தில் இந்த இலையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தடவினால் அம்மை தழும்புகளும் மறைந்து விடும். உன்னி செடியின் இலைகள் எந்த அளவு மருத்துவ குணம் அதே போல் அதன் வேரிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் வேர்கள் நமக்கு நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-104039-569650.png)
மேலும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும். வாய் துர்நாற்றத்தை சரி செய்து பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இரண்டு அல்லது மூன்று துண்டு உன்னி வேரினை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குடித்து வர கண் புரை நோய் படிப்படியாக குறையும். கண் பார்வையை தெளிவாக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-104135-345242.png)
உண்ணிச் செடியின் இலைகள் மூட்டு வலி மற்றும் வாத நீரினால் ஏற்படும் வலி, வீக்கம் இவற்றை சரி செய்யும். உன்னி செடியின் இலைகளை பறித்து அரைத்து மூட்டுகளில் பத்து போல போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விட இரண்டு நாட்களில் வாத நீர் சரியாகிவிடும். மூட்டு வலி, கை கால் வலி, குடைச்சல், அனைத்தும் சரியாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/9AwyZOYvawKJdqyduogC.jpg)
சிறியதாக ஏதாவது காயம் வந்தால் கூட இந்த செடியின் இலைகளை லேசாக கசக்கி அந்த காயத்தில் தேய்த்தால் அந்த காயம் கண்ணுகி தெரியாமல் மறைந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us