செடிகளுக்கு உரம், பூச்சிகளை விரட்ட: பயன்படுத்திய டீத்தூளை உருப்படியா யூஸ் பண்ண 5 வழிகள்
நீங்கள் டீ விரும்பியா? டீ காய்ச்சிய பிறகு அந்த டீத்தூளை என்ன செய்வீர்கள்? அதைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, இன்னும் பயன்படுத்துவதற்கு நிறைய வழிகள் உள்ளன.
நீங்கள் டீ விரும்பியா? டீ காய்ச்சிய பிறகு அந்த டீத்தூளை என்ன செய்வீர்கள்? அதைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, இன்னும் பயன்படுத்துவதற்கு நிறைய வழிகள் உள்ளன.
2/6
தேயிலையில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் வளமாக உள்ளது, இது உலர்ந்த இலைகளுடன் இணைந்து ஒரு சீரான உரக்கலவையை உருவாக்குகின்றன.
3/6
உலர்ந்த தேயிலை ஃபிரிட்ஜ், ஷூஸ் அல்லது அலமாரிகள் போன்ற பகுதிகளில் தேவையற்ற நாற்றங்களை திறம்பட உறிஞ்சி நடுநிலையாக்கும்.
Advertisment
4/6
பானைகள் மற்றும் பாத்திரங்களை கழுவ, டீத்தூள் ஒரு ஸ்கிரப்பாக செயல்படும். தேநீரில் உள்ள டானின்கள் மேற்பரப்பில் இருந்து கறை மற்றும் கிரீஸை அகற்ற உதவும்.
5/6
காய்ச்சிய தேநீர், தலைமுடி கழுவ சிறந்தது, இது முடிக்கு பிரகாசம் மற்றும் மென்மை சேர்க்கிறது. ஷாம்பு போட்டு குளித்த பிறகு, தேநீரை குளிர்வித்து, அதை உங்கள் தலைமுடியில் ஊற்றவும், சில நிமிடங்கள் வைத்திருந்து தலையை கழுவ வேண்டும்.
6/6
உலர்ந்த தேயிலை இலைகளை உங்கள் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ தூவி விடவும், இதன் வாசனை பூச்சிகளை விரட்ட உதவும். பயன்படுத்திய தேயிலை இலைகளை சேமித்து வைப்பதற்கு முன் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், அவற்றை முழுமையாக உலர்த்தவும்.