/indian-express-tamil/media/media_files/2025/05/03/S5LvQuDpjkVKWmxwsV0h.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/03/Heh89vqArlpRxAUw5Myc.jpg)
இவருக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். அதுவும் எண்ணெய் சேர்க்காத குழம்பு மீன் தான் சாப்பிடுவாராம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/03/kiHqqiKDU7HDGRWJdGBl.jpg)
அப்படி எண்ணெய் சேர்க்காமல் சத்துள்ள இந்த மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/edYeNxEWLO1YlXA5BwiR.jpg)
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கருவேப்பிலை சின்ன வெங்காயம் - 10 - 12 பச்சை மிளகாய் - 4 (நடுவில் கீறியது) பூண்டு - 10 (தட்டியது) தக்காளி - 2 (நன்கு பழுத்தது மற்றும் கல் உப்பு சேர்த்து பிழிந்தது) மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் புளி - சுவைக்கேற்ப தேங்காய் - 1/4 மூடி சீரகம் - 1/2 ஸ்பூன் மிளகு - 1/2 ஸ்பூன்
/indian-express-tamil/media/media_files/2025/05/03/q2lC928Yf0tcjRKMJocu.jpg)
முதலில் ஒரு மண்சட்டி அல்லது குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/03/X4IXOOrEqcyQDXFMP9AK.jpg)
தொடர்ந்து பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு முன்பு கல் உப்பு சேர்த்து பிழிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அதோடு, புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/03/iDGD1OGPo1KQcubBH7rC.jpg)
இதற்கிடையில், குழம்பிற்கு தேங்காயுடன் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். விருப்பம் இருந்தால் நீங்கள் தேங்காய் சேர்க்கலாம். இல்லையென்றால் தவிர்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/03/krmoVwpYKW1ufO0etwXH.jpg)
குழம்பு ஓரளவிற்கு சுண்டிய பிறகு, நறுக்கி சுத்தமான தண்ணீரில் கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து கொள்ளலாம். அவற்றை மிதமான சூட்டில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.