/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235517-2025-07-29-23-56-57.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235521-2025-07-29-23-57-32.png)
தேவையான பொருட்கள்
சிக்கன்: 500 கிராம், நன்கு கழுவியது, சின்ன வெங்காயம்: 15-20, நறுக்கியது, தக்காளி: 2, நறுக்கியது, பச்சை மிளகாய்: 2-3, கீறியது, இஞ்சி பூண்டு விழுது: 2 தேக்கரண்டி, மிளகாய் தூள்: 2 தேக்கரண்டி, மல்லித்தூள்: 2 தேக்கரண்டி, கரம் மசாலா: 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி, சோம்பு: 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல்: 2 மேஜைக்கரண்டி, முந்திரி: 5-6, எண்ணெய்: தேவையான அளவு, உப்பு: தேவையான அளவு, கொத்தமல்லி தழை: சிறிதளவு, நறுக்கியது.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235539-2025-07-29-23-57-32.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235547-2025-07-29-23-57-32.png)
பின், அவற்றை மிக்சியில் சேர்த்து, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235556-2025-07-29-23-57-32.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235603-2025-07-29-23-57-32.png)
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235608-2025-07-29-23-57-32.png)
அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிக்கன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235616-2025-07-29-23-57-32.png)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3-4 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளுங்கள். குக்கரை திறந்து, கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-235626-2025-07-29-23-57-32.png)
அவ்வளவு தான்... வருது அரைத்த கோழி குழம்பு தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.