/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133554-2025-07-29-15-31-53.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133606-2025-07-29-15-38-05.png)
தேவையான பொருட்கள்
காய்கறிகள் (உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பட்டாணி) - 1 கப், பொடியாக நறுக்கியது, சின்ன வெங்காயம் - 1/2 கப், நறுக்கியது, தக்காளி - 1, நறுக்கியது, பச்சை மிளகாய் - 2, கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தேங்காய் - 1/2 கப், துருவியது., முந்திரி - 10, ஊற வைத்தது, சோம்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கொத்தமல்லி தழை - சிறிதளவு, நறுக்கியது.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133619-2025-07-29-15-38-05.png)
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133628-2025-07-29-15-38-05.png)
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133636-2025-07-29-15-38-05.png)
நறுக்கிய காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133642-2025-07-29-15-38-05.png)
முந்திரி மற்றும் தேங்காயை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். விசில் வந்ததும் குக்கரை திறந்து, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133653-2025-07-29-15-38-05.png)
குருமா கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடான காய்கறி வெள்ளை குருமா தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-133554-2025-07-29-15-31-53.jpg)
இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.