கொத்தமல்லியை நன்றாக அரைத்த பிறகு, 250 கிராம் பச்சைமிளகாயை கீறி கொத்தமல்லியுடன் போட்டு அரையுங்கள். கொத்தமல்லி, பச்சைமிளகாய் அரைந்த உடன், அதனுடன் 200 கிராம் புளி போட்டு அரையுங்கள். நன்றாக அரைத்த பிறகு, 50 கிராம் கல் உப்பு போட்டு நன்றாக அரையுங்கள். ஒரு சொட்டுகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. அப்போதுதான் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது.