/indian-express-tamil/media/media_files/2025/04/02/iAfUTEfSu6NOCjV5dBYy.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/28/DPfDB0csCxd14TrSEr79.jpg)
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. முற்றாத முருங்கை இலை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/WvYQ3YOg2gUXBgQ4dZI9.png)
இதில் நாம் சேர்க்கும் நெய் முருங்கை இலையோடு சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை முயற்சி செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/y0tDL0KWQyj0jeRLoB1Q.jpg)
தேவையான பொருட்கள்
மைசூர் பருப்பு - 100 கிராம் ( குழைய வேகவைத்தது) முருங்கை இலை - ஒரு கப் முருங்கைக்காய் - 1 (2 இன்ச் அளவு நறுக்கியது) கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பிரிஞ்சி இலை - 2 பட்டை - 3 துண்டு இலவங்கம் - 6 ஏலக்காய் - 8 சோம்பு - 1 1/2 டீ ஸ்பூன் மிளகு - 1 1/2 டீ ஸ்பூன் ஸ்டார் அன்னாசி பூ - 4 பூண்டு - சிறிதளவு (இடித்தது) பச்சை மிளகாய் - 5 (இடித்தது) கல் பாசி - 10 கிராம் பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) கருவேப்பிலை - ஒரு கொத்து தண்ணீர் - 2 லிட்டர் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் குக்கிங் சோடா - சிறிதளவு
/indian-express-tamil/media/media_files/2025/01/28/5Dgi3WUpjGrjcu6j0C54.jpg)
ஒரு கையளவு பூண்டு சேர்க்க வேண்டும். அது வேகும் போது 5 பச்சை மிளகாய் எடுத்து இடித்து சேர்க்க வேண்டும். கொஞ்சம் கல்பாசி எடுத்து அதில் சேர்க்க வேண்டும். இப்போது நல்ல ஒரு மணம் வரும் வரை வதக்க வேண்டும். இப்போது அதில் முருங்கைக்காய் சேர்க்க வேண்டும், அதையடுத்து வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். இது எல்லாம் சேர்ந்து வதங்கியவுடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/xJscThRwnggOxBobRYTh.jpg)
இப்போது அதில் வேக வைத்திருக்கும் பருப்பை சேர்க்க வேண்டும். அதை சேர்த்து கிளறியவுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இது ஒரு 15 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-85.jpg)
இப்போது இன்னொரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் முருங்கை இல்லையே போடு 10 வினாடிகள் மட்டுமே ப்ளான்ச் செய்ய வேண்டும். அந்த இலைகளின் கலர் போகாமல் இருக்க கொஞ்சம் சோடா மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Murungai-Maram.jpg)
இப்போது அந்த முருங்கை இல்லையே வடிகட்டி ரன்னிங் வாட்டரில் கழுவ வேண்டும். இது சூட்டை குறைக்க உதவும். இதை மிக்சியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இப்போது அந்த அரைத்த பேஸ்டை அந்த கொதித்துக்கொண்டிருக்கும் கடாயில் சேர்க்க வேண்டும். அது நன்கு கொதித்த பிறகு அதற்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/murungai-keerai-rasam-tamil.png)
இப்போது அதை வடிகட்டி சூடாக இருக்கும் போது சாப்பிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.