/indian-express-tamil/media/media_files/2025/04/10/XXGQhmY2AL6gCGRX5utG.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-165225-465697.png)
சமையல் துறையில் வல்லுநராக வலம் வருபவர் வெங்கடேஷ் பட். இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-165303-218478.png)
வெள்ளைப் பணியாரம் - தேவையான பொருட்கள்:
அரிசி - முழு பங்கு உளுந்து - கால் பங்கு உப்பு - தேவையான அளவு சர்க்கரை - ஒரு சிட்டிகை சோடா மாவு - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் - தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173315-652326.png)
முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதனுள் உங்களது வீடுகளில் பயன்படுத்தும் ஒரு டம்ளர் அல்லது கண்ணாடி டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் தலை தட்டிய அளவு அரிசி போட்டுக் கொள்ளவும். அதன் மேல் உளுந்து சேர்த்து கோபுரம் போல் போட்டுக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173259-286346.png)
பிறகு இவற்றை தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளவும். இதனை அப்படி 3 மணி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை மை போன்ற அளவுக்கு அரைத்துக் கொள்ளவும். மாவு தோசை மாவை விட தண்ணியாக இருத்தல் வேண்டும். பிறகு, அரைத்து வைத்துள்ள மாவுடன் சர்க்கரை மற்றும் சோடா மாவு சேர்த்து ஒரு குழம்பு கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173326-899905.png)
பின்னர், ஒரு பணியாரம் சுடும் பாத்திரம் எடுத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் மாவை கலந்து கொண்ட குழம்பு கரண்டியால் மாவை அதிரசம் போல் வட்ட வட்டமாக ஊற்றிக் கொள்ளவும். பிறகு அவற்றின் மேல் எண்ணெய் தெளித்து நன்கு வேக விடவும். அவை வெந்த பிறகு அப்படியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த வெள்ளைப் பணியாரம் ரெடி. இவற்றை ருசிக்க காரசாரமான வர மிளகாய் சட்னி எப்படி தயார் செய்யலாம் எனப் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173714-697316.png)
அடுத்ததாக சட்னிக்கு ஒரு மிக்சி எடுத்து அதில் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173704-331744.png)
இதன்பிறகு ஒரு கடாய் எடுத்து சூடேற்றவும். பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும். உளுந்தம் பருப்பு பொன்னிறமாக வந்தவுடன் அதில் வர மிளகாய் சேர்க்கவும். பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/screenshot-2025-04-10-173723-559039.png)
பின்னர், உப்பு சேர்க்கவும். அத்துடன் புளி கரைசல் சேர்த்தது நன்கு கலந்து கொள்ளவும். இவற்றை அப்படியே 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து கீழே இறக்கினால் டேஸ்டியான வர மிளகாய் சட்னி தயார். இவற்றை நீங்கள் செய்து வைத்திருக்கும் வெள்ளைப் பணியாரத்துடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.