இன்று ஆகஸ்ட் 25ம் தேதி, கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை அருகே பிறந்த விஜயகாந்த்,
70களின் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடிகராக நுழைந்தார். தொடர்ந்து 80 களின் நடுப்பகுதியில், ஒரு அதிரடி ஹீரோவாக விஜயகாந்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
திரைப்படங்களில் அவரது லெக் ஃபைட்டுக்காக பலராலும் விரும்பப் பட்டவர்.
இன்றைய இளைய நடிகர்கள் பலருக்கும் சண்டைக் காட்சிகளில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
1990-ல் பிரேமலதாவை மணந்த விஜயகாந்துக்கு, விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.
தமிழ் மக்களின் விருப்பமான கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிச.28 அன்று தன் 71வது வயதில் காலமானார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.