New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/1TzuZn7ka79CPzSlzB6Y.jpg)
வெரிகோஸ் வெயினுக்குத் தீர்வு தரும் மூலிகை ஒன்று இருக்கிறது. ஆரம்பநிலை வெரிக்காேஸ்க்கு 15 நாட்களில் பலன் தெரியும் என்று ஒரு தகவல். அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு இந்த பதிவை பார்க்கலாம்.
வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படுகின்றன. வயதாகும் போது பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு கை வைத்தியம் உண்டா வாங்க தெரிஞ்சுக்கலாம்.
வெரிகோஸ் வெயின் நரம்புகள் வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை. ஆனால் இவை எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். உடலில் கால்கள் மற்றும் முகம் போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் போது இது சங்கடத்தை உண்டு செய்யும். சில சிலந்தி நரம்புகள் வெளிப்படையாக பார்க்க முடியும். இந்த வெரிகோஸ் வெயினுக்கு உரிய வீட்டு மருத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.
வேலை அல்லது ஓய்வு நேரங்களில் உட்காரும் போது கால்களை உயரமாக வைத்திருக்க வேண்டும். ஹை ஹீல்ஸ் பதிலாக தட்டையான காலணிகள் அணிவது கால்களில் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளுக்கு உதவும்.
நீண்ட நேரம் உட்காருவதை தவிர்ப்பதன் மூலம் வெரிகோஸ் வெயின் குறையலாம். இரத்த ஓட்டம் சீராக இருக்க, அவ்வபோது சுற்றி செல்ல அடிக்கடி எழுந்து செல்வது நிலையை மாற்றி வைப்பது நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
இதை தவிர்த்து இதை செய்வதற்கு விராலி என்கிற ஒரு மூலிகை உள்ளது.
இதை எடுத்து பாலுடன் சேர்த்து அரைத்து அந்த நரம்பு சுருண்டு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இது அப்படியே குணமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.