/indian-express-tamil/media/media_files/2025/03/18/bwgwsIVfwpdX8lv3YhhL.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/14/TPfuOWI8M6xemIibMtkp.jpg)
தாவர அடிப்படையிலான புரதத்தின் சக்திவாய்ந்த மூலமாக உள்ள சோயாபீன்ஸை அடிக்கடி பலரும் தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர். சோயாபீன்ஸ் 'சைவ இறைச்சி' என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் கொழுப்பு, புரதம், ஒமேகா-3, ஒமேகா-6, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, பி, டி, ஈ, கே1, ஃபோலேட், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம், அத்துடன் துத்தநாகம்,காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், ஐசோஃப்ளேவோன்ஸ் மற்றும் பல இருப்பதால் சோயாபீன்ஸ் ஊட்டச்சத்துக்களின் தாயகம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/huW6VWKqMOywI3vq1Cni.jpg)
இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இது சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆம், இதன் அதிகப்படியான நுகர்வு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும். நீங்கள் சோயா பீன்ஸை அதிகம் சாப்பிடுபவர் என்றால் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/yF5Y0ODBuTFtnlqKuHEv.jpg)
சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் மிகவும் பொதுவான பக்க விளைவு வயிற்று கோளாறு. நீங்கள் அதிகமாக சோயாபீன்ஸ் சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட கூடும். எனவே நீங்கள் சமீபத்தில் தான் வயிறு சார்ந்த நோயிலிருந்து மீண்டிருந்தால் சோயாபீன்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/Farh4q9DNNRrdo0aQoev.jpg)
குறிப்பாகஆண்கள் அதிகமாக சோயாபீன்ஸ் சாப்பிட கூடாது. சோயாபீன்ஸில் மனிதர்களிடம் காணப்படும் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படும் ஒரு வகை தாவர ஈஸ்ட்ரோஜன் சற்று அதிகமாக உள்ளது. எனவே, ஆண்கள் அதிகமாக சோயாபீன்ஸ் சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைய வழிவகுக்கும். இது பாலியல் குறைபாடு அலல்து செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-152734-844730.png)
அதே போல சோயாபீன்ஸ் அல்லது சோயா பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் ஹைவ்ஸ் மற்றும் அரிப்பு போன்ற அலர்ஜிக் ரியாக்ஷன்களை அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் சோயாபீன்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோயாபீன்ஸ் சாப்பிட்டால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில ஆய்வுகள் சோயா நுகர்வு தைராய்டு-ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) அளவை அதிகரிக்க கூடும், இது ஹைப்போ தைராய்டிசத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று காட்டுகின்றன. குறிப்பாக அயோடின் குறைபாடு உள்ளவர்களுக்கு சோயாபீன்ஸ் தைராய்டு செயல்பாட்டை மாற்றக்கூடும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-152721-584139.png)
மேலும் சோயாபீன்ஸில் சைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஆண் ஹார்மோன்களில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. இது ஆண்களின் பாலியல் சக்தியைக் குறைக்கிறது. மேலும், மார்பு மற்றும் வயிற்றில் கொழுப்பைசேர்கிறது. எனவே உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். அதே போல சோயா நுகர்வுடன் தொடர்புடைய மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளை விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.