பெருங்குடலைக் கூட க்ளீன் பண்ணும் இந்த தெரபி... வருடத்தில் ஒருமுறை இத ட்ரை செய்யுங்க: டாக்டர் தீபா
பெருங்குடல் சுத்திகரிப்பு என்பது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கோலோன் ஹைடரோதெரபி பற்றி முழுவதுமாக விளக்கியுள்ளார் மருத்துவர் தீபா
பெருங்குடல் சுத்திகரிப்பு என்பது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கோலோன் ஹைடரோதெரபி பற்றி முழுவதுமாக விளக்கியுள்ளார் மருத்துவர் தீபா
பெருங்குடல் சுத்திகரிப்பு உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. 90% சதவீத நோய்கள் பெருங்குடலின் முறையற்ற செயல்பாட்டால் உண்டாகிறது. எனவே பெருங்குடல் சுத்திகரிப்பு நிறைய வழிகளில் பயன்படுகிறது. பெருங்குடலில் குழாய் வழியாக திரவத்தை செலுத்தி மற்றொரு குழாய் வழியாக நச்சுக்களை வெளியேற்றுகிறது
2/6
நாம் வாய் வழியாக சாப்பிடும் உணவு தொண்டையைத் தாண்டியதுமே செரிமான வேலை என்பது தொடங்கிவிடும். அதன் முக்கியப் பணி பெருங்குடலில் நடக்கும். நாம் உட்கொள்ளும் தண்ணீரை உறிஞ்சுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் இறுதி கட்ட பொறுப்பு பெருங்குடலுடையது. உங்கள் பெருங்குடலை நன்கு கவனித்துக்கொள்வது முக்கியம்.
3/6
பெருங்குடல் சிகிச்சை, ஹைட்ரோ பெருங்குடல் சிகிச்சை, பெருங்குடல் நீர் அல்லது பெருங்குடல் நச்சுத்தன்மை நீக்குதல் என்றும் அழைக்கப்படும் பெருங்குடல் சுத்திகரிப்பு பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த வகையான சிகிச்சைகள் பெரும்பாலும் நல்ல பெருங்குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு செயலாக்கமான அணுகுமுறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
Advertisment
4/6
பெருங்குடல் சுத்திகரிப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து பழக்கத்தில் இருப்பது தான். முதலில் உணவு பொருட்கள் வழியாக செய்யப்பட்டு வந்தது இப்போது கொஞ்சம் ரசாயனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செய்யப்படுகிறது. தவறான மறுத்து அல்லது விஷம் குடித்தவர்களுக்கு எனிமா கொடுத்து வெளியே எடுப்பது ஒரு வகை.
5/6
மலக்குடலுக்குள் ஒரு குழாயைச் செருகி அதிக அளவு நீர் குழாய் வழியாக தள்ளுவர். அது பெருங்குடலில் உள்ளதை அள்ளி வெளியே இறைத்துவிடும். இதுவும் பெருங்குடலை முழுமையாக சுத்தப்படுத்த உதவும். இதை மருத்துவத்தில் சிறந்தவர்கள் தான் செய்வர்.
6/6
உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், எடை இழப்புக்கு உதவுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தரும் என்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news