/indian-express-tamil/media/media_files/2025/07/15/download-7-2025-07-15-12-35-07.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123523-2025-07-15-12-37-07.png)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் மாடலிங், குறும்படம் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123535-2025-07-15-12-37-07.png)
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகள் தமிழக மக்கள் மத்தியில் இவரைக் கொண்டு சேர்த்தது. அதில் கிடைத்த பிரபலம் காரணமாக யூகி, நாய் சேகர், ஜிகிரி தோஸ்து போன்ற படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123545-2025-07-15-12-37-07.png)
இதனால் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பவித்ரா லட்சுமி, திடீரென உடல் எடை குறையத் தொடங்கினார். பார்ப்பதற்கே அம்சமாக இருந்த பவித்ரா தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை குறைந்திருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123603-2025-07-15-12-37-07.png)
அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார் என்று ஒரு பக்கம் தகவல் பரவ, அதனை திட்டவட்டமாக மறுத்த உண்மையான காரணத்தை வெளிப்படுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123609-2025-07-15-12-37-07.png)
அதில் தான் சீரியஸான உடல்நலப் பிரச்னையில் இருப்பதாகவும், தற்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் கூறி அதிர்ச்சி தந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123618-2025-07-15-12-37-07.png)
அதேபோல், தன்னைப் பற்றி தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட பவித்ரா லட்சுமி, தனக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-123637-2025-07-15-12-37-07.png)
எனினும், இன்ஸ்டா பக்கத்தில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆளே முற்றிலுமாக உருக்குலைந்தவாறு எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார் பவித்ரா. இதனால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பவித்ரா சீக்கிரம் உடல்நலம் தேறிவர வேண்டும் எனக் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.