/indian-express-tamil/media/media_files/2025/05/19/vG7hJw0h4b2SBIsGTqB0.jpg)
/indian-express-tamil/media/media_files/MrCoArsazDmQ6vSDub5Z.jpg)
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அல்லாமல் கூந்தல் பிரச்சனையிலும் வைட்டமின் பி12 ஏன் முக்கியம். கூந்தல் வளர்ச்சிக்கு இவை எப்படி உதவுகிறது. வைட்டமின் பி12 குறைபாட்டால் முடி உதிர்வை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/PrOaNpGkioFj2DK0I3DU.jpg)
கூந்தல் நல்ல அடர்த்தியாக வளர்வதற்கும், முடி வளர்ச்சிக்கும் வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து அத்தியாவசியம். இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போது அது முடி உதிர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இதன் அறிகுறிகளை நம்மால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/yk0SmMr055Tsh79ANl3p.jpg)
நமது உடல் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து உதவுகிறது. நரம்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த சிவப்பணுக்களை சுரப்பதற்கும் இந்த பி12 ஊட்டச்சத்தின் பங்கு அதிகம். செல் வளர்ச்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/ZwOJB5qKVYBrF8Ej7Xmx.jpg)
நமது கூந்தலில் முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை தடுப்பு மயிர் கால்களை வலுவாக்க உதவுகிறது. நமது உடலில் இந்த ஊட்டச்சத்து தானாக சுரக்காது.. எனவே வைட்டமின் பி 12 நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை நாம் உட்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/CniX7QrxGm15tzWifOIZ.jpg)
வைட்டமின் பி12 ஆனது இரத்த சிவப்பணு உருவாக்கத்துக்கு உதவுகிறது. இது உச்சந்தலையில் மற்றும் நுண்ணறைகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. இது முடி வேர்களுக்கு இரத்த விநியோகம் குறைபபதால் மயிர்க்கால்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/kwVO7Dtfl9V8aCBWn2fa.jpg)
வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக உள்ளவர்கள் வாய்வழி வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி ஊசிகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் பி 12 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி உணவுகள், முட்டை, பால் போன்ற உணவுகளையும் தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/TC4gRVGA1CBleATcZeXS.jpg)
மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. வைட்டமின் பி12 சிகிச்சை எடுக்கும் போது ஆரோக்கியமான மற்றும் இரசாயனங்கள் அற்ற ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை கூந்தலுக்கு பயன்படுத்த முயற்சி செய்வது முடி இழப்பை தவிர்க்க செய்யும்.
/indian-express-tamil/media/media_files/0GoGZtGFHI6XOU3H8qPD.jpg)
சைவ உணவுகளை உட்கொள்பவர்கள் ஈஸ்டை அவர்களது உணவுகளில் சேர்த்துக் கொள்வது இந்த குறைபாட்டை தடுக்க உதவும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இதற்கான மாத்திரைகளை குறிப்பிட்ட கால அளவு வரை உட்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.