இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது மிரட்டும் கம்பீரமான குரலால் சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தனது கல்லூரிக் காலத்திலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஸ்டேட் வங்கி ஊழியராகப் பணியாற்றினார்.
2/5
45 வருடங்கள் மற்றும் 750 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், 'சாமி' திரைப்படத்தில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு நடிகரான இவருக்கு, 'சாமி' திரைப்படம் தான் தமிழில் முதல் படமாகும்.
3/5
'சாமி' படத்திற்குப் பிறகு, கோட்டா சீனிவாச ராவ் 'குத்து' (2004), 'திருப்பாச்சி' (2005), 'பரமசிவன்' (2006), 'சத்யம்' (2008), 'சாமி 2' (2018), மற்றும் 'காத்தாடி' (2018) போன்ற பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தார். வில்லனாக அவரது நடிப்புகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றார்.
Advertisment
4/5
கோட்டா சீனிவாச ராவ் நகைச்சுவை, வில்லன், தந்தை, மாமா எனப் பல பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்தாலும், அவரது தனித்துவமான குரல் மற்றும் நடிப்புத் திறனால் விரைவில் வில்லன் கதாபாத்திரங்களில் நிலைபெற்றார்.
5/5
உடல்நலக் குறைவு காரணமாக அவர் நடக்க முடியாமல் தவிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் அவர் இன்று காலை(ஜூலை 13) வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது நீண்டகாலப் பணி மற்றும் பன்முகத் திறமையால், கோட்டா சீனிவாச ராவ் இந்திய சினிமா உலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.