/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-488393008-612x612-1-2025-08-23-14-37-26.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1152661804-612x612-2025-08-23-14-43-03.jpg)
நீண்ட ஆயுளுடன் வாழும் ஜப்பானியர்கள், சுவையான உணவுகளை உண்டாலும், உடல் பருமன் இல்லாமல் ஒல்லியாக இருப்பது வாழ்க்கை முறையால் தான். அவர்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான 6 முக்கிய காரணங்களை இப்பதிவில் காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1142723719-612x612-2025-08-23-14-43-03.jpg)
ஜப்பானியர்கள் 'ஹரா ஹாச்சி பு' என்ற தத்துவத்தைப் பின்பற்றி, வயிறு 80% நிரம்பும் வரை மட்டுமே உண்கின்றனர். இது அதிகம் சாப்பிடுவதையும், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கும், மேலும் செரிமானத்துக்கும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1144253776-612x612-2025-08-23-14-43-03.jpg)
ஜப்பானியர்கள் சுத்திகரிக்கப்பட்ட, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்த்து, புதிய காய்கறி, பழம், மீன், அரிசி, கடல் உணவுகள், மிசோ, நட்டோ போன்ற புளித்த உணவுகளை அதிகம் உண்டுவார்கள். இதில் உள்ள ஒமேகா-3, நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் ஆகியவை ஆரோக்கியத்தையும் சமச்சீரான ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1304802994-612x612-2025-08-23-14-43-03.jpg)
ஜப்பானியர்கள் ஆவியில் வேகவைத்தல், கிரில்லிங், லேசாக வதக்குதல் போன்ற ஆரோக்கிய சமையல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அதிக எண்ணெய் பயன்படுத்திப் பொரிப்பதை தவிர்ப்பதால், ஊட்டச்சத்து கெடாமல், கலோரி மற்றும் கொழுப்பு சேர்வதும் குறைகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1310511832-612x612-2025-08-23-14-43-03.jpg)
ஜப்பானியர்கள் சிறிய தட்டுகளில் பலவகை உணவுகளை அழகாக பரிமாற prefer செய்கிறார்கள். உணவின் அளவுக்குப் பதிலாக தரமும் சுவையும் முக்கியம். இந்த முறை, சலிப்பை தவிர்த்து, குறைந்த அளவில் உணவு உட்கொள்ள உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-488393008-612x612-1-2025-08-23-14-37-26.jpg)
ஜப்பானியர்கள் நடக்கல், சைக்கிள் ஓட்டம், படிக்கட்டுகளில் ஏறல் போன்ற செயல்களால் அன்றாட வாழ்விலேயே உடற்பயிற்சியைச் செய்து வருகிறார்கள். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/22/bZoNwiH9YiM5SdmOAjae.jpg)
ஜப்பானியர்கள் தினசரி க்ரீன் டீ அருந்துவது வழக்கம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேடசின் சேர்மங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பு மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், இது இதய நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/healthy-diet-getty-931437.jpg)
ஜப்பானியர்களின் உடல் எடை கட்டுப்பாடின் ரகசியம், ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல; அது அவர்களின் முழுமையான வாழ்க்கை முறையின் விளைவாகும். இதே பழக்கங்களை நாமும் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.