/indian-express-tamil/media/media_files/2025/05/10/pVjFDzEt0e7AuoknztG9.jpg)
/indian-express-tamil/media/media_files/zBMTU1RdPgvGwwILmqQk.jpg)
உடல் எடையைக் குறைக்க சேனைக்கிழங்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். ஏனெனில் இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். இவை மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். அதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் சேனைக்கிழங்கை வாரத்தில் இரண்டு நாட்களாவது உணவில் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
/indian-express-tamil/media/media_files/0ibH0FhNa3Cc1aXRyGnC.jpg)
யானையின் கால்களைப் போன்று கருமையாக அகன்று பரந்து இருப்பதால் இதை ஆங்கிலத்தில் elephant foot yam என்று அழைக்கிறார்கள். சேனைக்கிழங்கில் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. அவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்டிராலைக் குறைத்து இதய நோய் ஆபத்துகள் எற்படாமல் பாதுகாக்கிறது.
/indian-express-tamil/media/media_files/dh19b2g6nX380X849C5e.jpg)
சேனைக்கிழங்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதமான காய்கறி என்று ஏராளமான ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. இதிலுள்ள இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மனநிலையையும் மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் நன்கு குறைவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/ijNmw0vbA0yHrm1VZlKG.jpg)
அதிக உடல் சூடு, மலக்குடல் அழற்சி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் மூல நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் இந்த சேனைக்கிழங்கை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் இருப்பவர்களுக்கு மலம் கழித்தலின் போது உண்டாகும் எரிச்சல் மற்றும் வலியை இது குறைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/EqeZq4W31CMoEXlklI0n.jpg)
சேனைக்கிழங்கில் அதிகப்படியான ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளும் வலி நிவாரணப் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இவை ஆர்த்தரைடிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் மூட்டு வலி முதலிய பிரசசினைகளைக் குறைக்கிறது. வயதாகும் போது ஏற்படுகிற மூட்டுத் தேய்மானம், மூட்டு நகர்வு போன்ற ஆபத்துக்களை குறைத்து எலும்புகளை வலுவாக்க இதிலுள்ள கால்சியம், மக்னீசியம் உள்ளிட்டவை உதவி செய்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.