இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்தவர் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங். இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்திருக்கிறார்.
சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 398 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 11,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். தனது சுழல் மாயாஜலத்தால் 180 விக்கெட்டுகளுக்குமேல் கைப்பற்றியுள்ளார்.
யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 4 வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.
12 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்த யுவராஜ் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான எம்.எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைத் தொடர்ந்து, ஆல்-ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
யுவராஜ் சிங் பயோபிக் உருவாக இருப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இது பற்றி மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் யுவராஜ், தன்னுடைய பயோபிக் யாருக்காவது உத்வேகத்தை கொடுத்தால் அவர் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
யுவராஜ் பயோபிக்கில் நடிக்க உள்ள நடிகர் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். விரைவிலே படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.