அ.தி.மு.க-வில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் - 1000 விண்ணப்பங்கள் குவிந்தன!

இதுவரை 1000 அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு கடந்த 4-ம் தேதி துவங்கியது. ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை தொடங்கி வைத்தனர். இதற்கு முதல் நாளிலேயே இதற்கு 250 மனுக்கள் குவிந்தன.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25000 பணம் செலுத்தி, விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென முன்னர் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு, இந்நிகழ்வு முடிவுக்கு வருகிறது. அதோடு, இதுவரை 1000 அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Politics news in Tamil.

×Close
×Close