அதிமுக கட்சியின் தலைமை யாரு என்று தேர்ந்தேடுப்பதில் கடந்த ஆண்டில் இருந்து விவகாரம் எழுந்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் விதத்தில், கட்சியில் பொதுக்குழு கருத்துக்கணிப்பு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழுவின் இறுதி முடிவாக எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பொதுக்குழுவில் முடிவு செல்லும செல்லாதா என்ற விவகாரம் நீதிமன்றத்தில் முறையிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும் வழக்கறிஞருமான திருமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பொதுக்குழுவின் முடிவு செல்லும் என்றால், அவர்களது வழக்கு தானாகவே வென்றிருக்குமே; இவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்வதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம் இவையனைத்தையும் கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம். நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்துகொண்டு இருக்கும் வரை, நாங்கள் எங்களது கருத்தில் உறுதியாக நிற்போம்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் வரையில், எங்களது உத்தரவை கேட்டுப்பெரும் உரிமை இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பெறாமல் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது. எடப்பாடி தரப்பினர் இந்த வழக்கின் முதற்கட்டதை கொண்டாட முடியும், ஆனால் இறுதி முடிவை கொண்டாட முடியாது", என்று கூறுகிறார்.