scorecardresearch

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜம்மு – காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

mk stalin article 370 protest, mk stalin protest jantar mantar, jammu kashmir article 370, dmk article 370 protest, திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு, மு.க.ஸ்டாலின், opposition article 370 protest, DMK MPs Protest
mk stalin article 370 protest, mk stalin protest jantar mantar, jammu kashmir article 370, dmk article 370 protest, திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு, மு.க.ஸ்டாலின், opposition article 370 protest, DMK MPs Protest

DMK announced protest at Jantar Mantar: ஜம்மு – காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில் அவர் “அமைதி திரும்புகிறது என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக்கொண்டே, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தொலைத் தொடர்புகளைத் துண்டித்து காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு பணியாற்றிய அனைவரையும் இன்றோடு 14 நாட்களுக்கு மேலாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்து பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பாஜக பறித்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டமன்றம் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்துவைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Demanding release of kashmiri leaders dmk announced protest at jantar mantar on august

Best of Express