Chandrayaan-2 releases 3D image on moon: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதன்கிழமை சந்திரயான் -2 வின்கலத்தால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளக் குழிகளின் புதிய 3-டி புகைப்படத்தை வெளியிட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 வின்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு இஸ்ரோவுடன் தொடர்பை இழந்தது. ஆனாலும், சந்திரயான் - 2 வின்கலம் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவின் புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரோ புதன்கிழமை சந்திரயான் -2 வின்கலத்தால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் புதிய 3-டி புகைப்படத்தை வெளியிட்டது.
டெரெய்ன் மேப்பிங் கேமரா -2 (டி.எம்.சி -2) முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை (டி.இ.எம்) தயாரிப்பதற்காக 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்மடங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது.
டி.எம்.சி -2 லிருந்து வரும் மும்மடங்கு தெளிவான படங்களை டிஜிட்டல் மேம்பட்ட மாதிரிகளாக மாற்றும்போது போது, நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம், எரிமலைக் குழிகள், (எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள்), ரில்ஸ், டோர்சா அல்லது சுருக்க முகடுகள், கிராபன் கட்டமைப்புகள் மற்றும் நிலவின் குவிமாடப் பகுதி அல்லது கூம்புகள் உள்ளிட்ட மேற்பரப்பு நிலப்பரப்பு உருவமைப்புகளை வரைபடமாக்க உதவுகின்றன.