Advertisment

அரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன் - ஜெ.தீபா

J Deepa : அவர் தொடர்ந்து அரசியலில் தொடர்கிறார். அவரது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரது அரசியல் பணிகள் இனியும் தொடரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayalailtha, j.deepa, demise, mgr amma deepa peravai, admk, facebook, ஜெயலலிதா, ஜெ.தீபா, இழப்பு, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக, பேஸ்புக்

jayalailtha, j.deepa, demise, mgr amma deepa peravai, admk, facebook, ஜெயலலிதா, ஜெ.தீபா, இழப்பு, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக, பேஸ்புக்

J Deepa And Politics: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது, என்னுடைய உடல்நிலையே, நான் அரசியலில் இருந்து விலக முக்கிய காரணம். நான் கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன்.நான் நினைத்த சூழல், இப்போது இல்லை. நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. நான் ஜெயலலிதாவின் சொத்துக்கு ஆசைப்படவில்லை. அரசியலுக்கு தான் வந்ததே தவறு என பலமுறை யோசித்திருப்பதாக அவர் கூறினார்.

கபே காபி டே உரிமையாளர் மாயம், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா மாயம் உள்ளிட்ட தேசிய நிலவரங்களை காட்டிலும் தமிழகத்தில் பதற்ற நிலையை உருவாக்கியது 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபாவின அறிவிப்பு தான்....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா போன்று இருந்ததன் காரணமாக, மக்களிடம் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.

கட்சி ஆரம்பித்ததும், ஜெயலலிதாவின் சாயலிலேயே இவர் இருப்பதால் கிராமப்புறங்களில் தீபாவின் அரசியல் வருகையை பலர்  வரவேற்றனர். இன்னொரு ஜெயலலிதாவாக கூட இவரை மக்கள் நினைக்க துவங்கினார்கள். ஆனால் பேரவையில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லாம் வருவார், ஏதாவது பேட்டி, அறிக்கை தருவார்.. பிறகு காணாமல் போய்விடுவார். இதைவிட, எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றுகூட அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு தேர்தலை சந்தித்தாரா, நிலைப்பாடு என்ன என்பது வெளிஉலகுக்கு கடைசிவரை தெரியவேயில்லை.

கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை.

பேஸ்புக் பதிவு : இந்நிலையில், தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் போட தமிழகமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் அப்படியே ஷாக்காகியிட்டேன், என்ற நிலைமைக்கு சென்று விட்டனர்.

மனமாற்றம் : அவரிடம் நீங்க போகக் கூடாது என்று அவர்கள் வேண்டி விரும்பி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இதைப் பார்த்து நெகிழ்ந்து போன தீபா தனது முடிவை கைவிட்டார். முகநூல் பக்கத்திலிருந்தும் தனது பதிவை நீக்கி விட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து அரசியலில் தொடர்கிறார். அவரது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரது அரசியல் பணிகள் இனியும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் கட்சி தொண்டர்கள், மீண்டும் கட்சி பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

அதிரடி முடிவு : எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

Deepa Jayakumar J Deepa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment