370-ஐ திருத்த உதவிய 370: காஷ்மீர் பிரச்னையில் எதிர்வரும் சட்ட விவாதங்கள்

Article 370- நாம் சரத்து 370-வை அதிகமாக பேசுகின்றோம் ,விவாதிக்கின்றோம். ஆனால் உண்மையான அரசியல் சூட்சமம், சாணக்கியத்தனம்,367 உட்பிரிவு (4)-ல் தான் உள்ளது.

article 370, article 370 in kashmir, article 370 in kashmir news,சரத்து 367 உட்பிரிவு (4),சரத்து 370
article 370, article 370 in kashmir, article 370 in kashmir news,சரத்து 367 உட்பிரிவு (4),சரத்து 370

Apurva Vishwanath

காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்துக்கள் விலக்கப்பட்டதற்கான அரசியல் கருத்துவேறுபாடுகள் நம்மில் அதிகமாய் இருந்தாலும், அந்த நீக்கம் சட்டப்படி செல்லுமா? அரசியலமைப்பில் இதற்கு இடமுள்ளதா? என்பதற்கான கேள்விகள் தான் இன்று நம்மில் பல பேருக்கு வர ஆரம்பித்துள்ளன .

சட்டக் கோணத்தில் பார்த்தால்:

இந்திய அரசு இந்திய அரசியலமைப்பிலுள்ள சரத்து 370-வை பயன்படுத்தி, அந்த 370-ல் சொல்லப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்த்தை நிக்கியிருப்பது தான் வேடிக்கை. இன்னும் சரத்து 370 நம் அரசியலமைப்பில் தான் உள்ளது. அரசியலமைப்பு நடைமுறையின் கீழ், ஒரு அரசு எந்த மாற்றம் செய்தாலும் அதை அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தின் அறிமுகப்படுத்தி நான்கில் மூன்று உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்படவேண்டும். ஆனால், காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்துக்கள் விலக்கப்பட்டதில் இந்த முறையை அரசு எடுக்கவில்லை.

அதற்கு நேர்மாறாக ஜனாதிபதி உத்தரவின் மூலம் சரத்து 367-ஐ பயன்படுத்தி சரத்து 370-ல் உள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது. இந்த ஜனாதிபதி உத்தரவு கொடுப்பதற்கான அதிரகாரத்தை அரசு சரத்து 370-லிருந்து எடுத்துள்ளது.

புரியவில்லையா? பதட்டப்படாதீர்கள்:

இந்திய அரசியலமைப்பு சரத்து 370 துணைப்பிரிவு (ஈ) வின் படி இந்திய அரசியலமைப்பின் விதிகளை ஜம்மு-காஷ்மீருக்கு நீட்டிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது(சிறப்பு அந்தஸ்துகளை நீக்குவது தொடர்பான ). ஆனால் இந்த அதிகாரம் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், ஜம்மு காஷ்மீர் அரசு,ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் பயன்படுத்த முடியாது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் இரண்டு:

ஒன்று ,ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 17th Nov. 1956 -லே கலைக்கப்பட்டது. இரண்டாவதாக,தற்சமயம் அங்கு ஜனாதிபதி ஆட்சி நடப்பதால் , ஜம்மு -காஷ்மீரில் சட்டபேரவையும் கிடையாது,மக்கள் ஆட்சியும் கிடையாது.

பின் நேற்று(ஆகஸ்ட் 5
) ஜனாதிபதி உத்தரவு எப்படி வெளியிடப்பட்டது?

இந்த இரண்டு சிக்கலையும் தான் சரத்து 367 வழியாக இந்திய அரசு சமாளித்து இருக்கிறது . அதாவது சரத்து 367-ல் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் என்பதற்கு பொருள் ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவை என்றும் , ஜம்மு காஷ்மீர் அரசு என்பதற்கு மந்திரிசபையின் ஆலோசனைக்கு உட்பட்டு செயல்படும் கவர்னர் என்றும் மாற்றியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடப்பதால் அங்குள்ள கவர்னரின் சம்மதத்தை அம்மாநில அரசின் சம்மதமாக எடுத்து சிறப்பு அந்தஸ்துக்களை நீக்கும் இந்த ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாம் சரத்து 370-வை அதிகமாக பேசுகின்றோம் ,விவாதிக்கின்றோம். ஆனால் உண்மையான அரசியல் சூட்சமம், சாணக்கியத்தனம்,சரத்து 367 உட்பிரிவு (4)-ல் தான் உள்ளது.

Get the latest Tamil news and Politics news here. You can also read all the Politics news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jammu and kashmir article 370 amit shah article

Next Story
வெளியேறும் 2.50 லட்சம் மக்கள், குவிக்கப்படும் கூடுதல் ராணுவம்! உச்சக்கட்ட பரபரப்பில் ஜம்மு காஷ்மீர்!Mobile internet services restored in Kargil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com