எர்ணாக்குள உயர்மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப் பொறுப்பில் இருந்த கார்டினல் ஜார்ஜ் அல்லெஞ்சேரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட அத்தனைப் பொறுப்புகளில் இருந்தும் ஜார்ஜை விடுவிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று வாடிகன் திருச்சபை தகவல்.
தேவாலத்தியற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதிற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார் ஜார்ஜ். தற்காலிகமாக பாலக்காட்டு திருச்சபைகளை மேற்பார்வை செய்துவரும் ஆயர் ஜேக்கப் மனதொடாத் எர்ணாக்குள உயர்மறை கத்தோலிக்க திருச்சபைகளையும் கவனித்துக் கொள்வார்.
போப் பிரான்சிஸ் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவு, ஜார்ஜ்க்கு மிகப்பெரிய அளவிலான பின்னடைவினை ஏற்படுத்தும், கொச்சினில் இருக்கும் சிரிய-மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமை பேராயராக இருக்கும் இவர், இந்தியாவில் இருந்து போப்பினை தேர்ந்தெடுக்கும் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராவர்.
ஜார்ஜ் தொடர்ந்து கொச்சின் சிரிய-மலபார் கத்தோலிக்க தேவாலயத்தில் பணிபுரிவார் ஆனால், எர்ணாக்குள உயர்மறை மாவட்ட திருச்சபை சார்ந்த நிர்வாகத்தில் தலையிட இயலாது. திருச்சபைக்கான இடம் வாங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 96 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக ஜார்ஜ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் இருக்கும் வாடிகன் பிரதிநிதியிடம் கோரிக்கை விடப்பட்டது.
தேவாலயத் தொடர்பாளர் ஜிம்மி பூச்சக்காட் இதுபற்றி பேசும் போது, “ஜார்ஜ் கார்டினலாக பதவியில் நீடிப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. அது குறித்த தகவலை புதிய நிர்வாகம் அமைந்த பின்பு அவர் தெரிவிக்க வேண்டியது இருக்கும். ரோமிலிருந்து வந்த கடிதத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்து, ஜார்ஜினை நீக்கியது தொடர்பாக விரிவான தகவல் தரப்பட்டிருக்கின்றது. தற்காலிகமாகவே நிர்வாகிகளை நியமித்திருக்கின்றது ரோம் திருச்சபை. எர்ணாக்குள உயர்மறை மாவட்ட திருச்சபைக்கு வெகு விரைவில் நிரந்தர பேராயர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறினார்.