scorecardresearch

‘அசாமில் பாஜக ஆட்சி!’ வேரறுக்கப்படும் நில அபகரிப்பு; லவ் ஜிகாத் – அமித் ஷா உறுதி!

அசாமில் பாரதிய ஜனதா ஆட்சி மலர்ந்தால், மாநிலத்தின் பெரும் பிரச்னையாக இருக்கும் நில அபகரிப்பு மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவை வேரோடு அழிக்கப்படும். பாரதிய ஜனதா ஆட்சியில் பயங்கரவாதமும் போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்படும்

‘அசாமில் பாஜக ஆட்சி!’ வேரறுக்கப்படும் நில அபகரிப்பு; லவ் ஜிகாத் – அமித் ஷா உறுதி!

தமிழகம், கேரளம், அசாம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல் தேதி நெருக்குவதை அடுத்து, அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் உள்ள 126 சட்டபேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களத்தில் இருக்கும் பாஜக, அதன் நட்சத்திரத் தலைவர்களை பிரசாரக் களத்தில் ஈடுபடுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பேசினார்.

அசாமில் பெங்காலி இன மக்கள் அதிகம் வாழும் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தில் வசிக்கும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதே வேளையில், நாட்டிற்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவும் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள். வங்கதேசம் உள்ளிட்ட மூன்று அண்டை நாடுகளிடமிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் எளிமையான முறையில் குடியுரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, சர்வ பாரதிய சன்யுக்த் மோர்ச்சா அமைப்பின் முதல்வர் வேட்பாளர் பத்ருதீன் அஜ்மல், பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பெங்காலி வம்சாவளியைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஊடுருவல் ஊக்குவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், அசாமில் பாரதிய ஜனதா ஆட்சி மலர்ந்தால், மாநிலத்தின் பெரும் பிரச்னையாக இருக்கும் நில அபகரிப்பு மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவை வேரோடு அழிக்கப்படும். பாரதிய ஜனதா ஆட்சியில் பயங்கரவாதமும் போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் அடியோடு வெறுக்கும் இவை இரண்டும் தொடர்ந்து கொண்டே செல்லும். காங்கிரஸ் கட்சியில், ராகுல் உள்பட பல தலைவர்கள் தேர்தல் நேரத்தில் அசாமுக்கு சுற்றுலா வருகிறார்கள். முதல்வர் வேட்பாளரான பத்ருதீன் அஜ்மல் அசாமின் அடையாளம் என ராகுல் காந்தி பேசி வருவது யாராலும் ஏற்க முடியாத கூற்று. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அசாம் மக்கள் ஊடுருவலால் நிரம்பும் மாநிலமாகவே தொடரும்.  

அசாமில் ஒன்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ்பெற்ற காசிரங்க தேசிய பூங்காவிலும் மாநிலத்திற்குள் அத்துமீறி குடியேறியவர்களால் நில அபகரிப்பு நடந்துள்ளது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி அமைந்தால், பகலில் வானத்தில் நட்சத்திரங்களை எண்ணுவதைப் போல அபகரிப்பு செய்பவர்களை பொது மக்கள் எண்ணலாம் நான் நான் உங்களுக்கு உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுபவர்களை ஒடுக்க, ஒழுங்குமுறை கொள்கை ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Love land jigad against rules amit shah bjp congress assam election

Best of Express