Advertisment

செவ்வாய் கிரகத்தின் பெரிய பள்ளம்… நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

இந்த புகைப்படத்திற்கு இதுவரை 4 லட்சத்து 49 பேர் லைக் செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களின் கால்தடம் போல் தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
செவ்வாய் கிரகத்தின் பெரிய பள்ளம்… நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு, “The Martian crater marks the spot,” என குறிப்பிட்டுள்ளது.

Advertisment

நாசா, இந்தப் படத்தை ஹை ரெசொலூஷன் இமேஜிங் சைன்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில், செவ்வாய் கிரகத்தில் 0° லாங்கிடுயூட் பார்க்கிறீர்கள். இது சிவப்பு கிரகத்தின் கிரீன்விச் ஆய்வகத்திற்கு சமமானதாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த பதிவில், வரைபடம் ஒரு பிக்சலுக்கு 50 சென்டிமீட்டர் (19.7 இன்ச்) அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்திற்கு இதுவரை 4 லட்சத்து 49 பேர் லைக் செய்துள்ளனர். பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில், செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளின் கால்தடம் போல் தெரிகிறது என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், கடவுளின் அனைத்து படைப்புகளும் அழகானது. பிரபஞ்சம் ஒரு விதிவிலக்கு அல்ல என தெரிவித்திருந்தார். இதுதவிர, வாயடைக்க வைக்கும் அற்புதமான ஒன்று என பல்வேறு கமெண்ட்கள் பதிவிடப்பட்டன.

நாசா குறிப்பிட்டுள்ள கிரீன்விச் ஆய்வகம், லண்டனில் ஒரு செங்குத்தான மலையின் மீது உள்ளது. இது பூமியின் பிரதான மெரிடியனைக் குறிக்கிறது. இது வடக்கு-தெற்குக் கோடு ஆகும். கிழக்கு மேற்கு எங்கு சந்திக்கிறது என்பதை வரையறுக்கிறது. மேலும், வானியல் அவதானிப்புகளுக்கு பூஜ்ஜிய குறிப்புக் கோடாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment