பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தநிலையில், நேற்று (ஆகஸ்ட் 9) முதல்வர் நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து கொடுத்தார். பிகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது.
இதையடுத்து, ஜேடியூ, தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்கிறார். இந்நிலையில், பாஜக பிகாரில் மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களை எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
1. ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது பற்றி உங்கள் கருத்து?
தொழில் வளர்ச்சி, மக்கள் நலன், புதிய திட்டங்கள் குறித்து பாஜக தொடர்ந்து பேசி வந்தது. ஆனால் கடந்த மூன்று. நான்கு மாதங்களாக நிதிஷ் தேஜஸ்வி யாதவுடன் பேசிக் கொண்டிருந்தார். தேஜஸ்வியின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், ஆர்ஜேடி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் என்ன ஆனது என்று எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இப்போது போலா யாதவ் (லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர்) கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எதிரான ஆதாரங்களுடன், ஆர்ஜேடியை அழிக்க இது சரியான நேரம் என்று நிதிஷ் நினைத்தார்.
ஆர்ஜேடி தலைமைத்துவம் போனதும், ஆர்ஜேடி வாக்காளர்கள் ஜேடியூக்கு வருவார்கள் என்று நினைக்கிறார். ஆர்ஜேடியை அழிப்பதே அவரின் நோக்கம்.
2. பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு?
2024 மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். 2025 பிகார் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம்.
3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொண்டு வந்ததில் நிதிஷ் குமாருக்குப் பங்கு இல்லையா?
மிதிலா மற்றும் மகத் பகுதியில் (இபிசி வாக்குகள் அதிகம் உள்ள பகுதி) என்டிஏ ஆரம்பத்தில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் பிரதமர் மோடி பின் அங்கு விரிவான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒவ்வொரு நாளும் பல கூட்டங்களில் உரையாற்றினார். இது என்டிஏ கூட்டணிக்கு வெற்றியைத் தேடி தந்தது.
4. பிகாரில் கூட்டணி இல்லாமல் பாஜக தேர்தலை சந்திப்பது கடினம்?
பாஜக தனித்து ஆட்சி அமைப்பதில் சிரமம் உள்ள மாநிலங்களில் ஒன்று பிகார். ஆனால் மோடியின் புகழ் எந்த சாதி சமன்பாடுகளுக்கும் அப்பாற்பட்டது. அவருடைய நல்லெண்ணம் சாதி வேறுபாடுகளைக் கடந்தது. அடுத்த முறை நிச்சயம் ஆட்சி அமைப்போம்.
5. மோடிக்கு எதிராக நிதிஷ் குமார் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?
தனது மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கூட (வெற்றி) பெற முடியாத ஒரு தலைவர் எப்படி மோடிக்கு எதிராக களமிறங்க முடியும்? நிதிஷ் ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு தாவுகிறார். எட்டு வருடங்களில் மூன்று முறை மாறிவிட்டார்.
நாங்கள் உண்மையான பிரச்சினைகளை எழுப்பத் தொடங்கியதால், அவர் புறக்கணித்தார். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தாதது, குடிநீர் திட்டம் போன்று பிரச்சினைகளை எழுப்பினோம். ஹர்கர் நல் யோஜனா திட்டத்தைப் பேசும்போது, அதை தவிர்த்தார். மோடிக்கு ஏன் பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.
பீகார் மாநிலத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததால் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுகிறது. பீகாரில் பல இடங்களில் இது நடந்தது. வெடி பொருள் வெடிப்பது பட்டாசு வெடிப்பது என்று கூறப்படுகிறது. சில அதிகாரிகள் குற்றச் செயல்களை மூடி மறைக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்காக பலர் பிடிப்பட்டால், அதில் பிகார் தொடர்பு இருக்கிறது. இந்தக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.
6. பிகார் தொழில்துறை மாநிலம்
பிகாரை தொழில்துறை மாநிலமாக மாற்ற முயற்சித்து வந்தோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து சரியான பாதையில் சென்றோம். ஆனால் இப்போது தேஜஸ்வி யாதவ் ஆளும் கூட்டணிக்கு வருவதால், பிகார் மீண்டும் ஊழலின் பிடியில் சிக்கிவிடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம். கடந்த சில மாதங்களில் நாங்கள் செய்ததெல்லாம் வீணாகிவிடும் என்று அஞ்சுகிறோம்.
ஆளும் கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதால் மீண்டும் ஜங்கிள் ராஜ் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.