14 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: ஓ.பி.எஸ் அறிவிப்பு | Indian Express Tamil

14 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: ஓ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுகவில் தலைமை போட்டி நீடித்து வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் 14 மாவட்ட செயலாளர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டார்.

Tamil News, Tamil News Today Latest Updates

அதிமுகவில் ஒருக்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருக்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தநிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒன்றை தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கம் செய்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தார். அதிமுக உள்கட்சி விவகாரம் இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில, ஓ.பன்னீர்செல்வம் 14 புதிய மாவட்ட கழகச் செயலாளர்களை நியமித்து இன்று (ஜூலை 24) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

  • சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் – முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன்
  • ராமநாதபுரம் – மாநிலங்களவை எம்பி தர்மர்
  • மதுரை – ஆர்.கோபாகிருஷ்ணன்
  • கோவை – முன்னாள் எம்எல்ஏ கோவை கே.செல்வராஜ்
  • வடசென்னை (மேற்கு) -கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி
  • சென்னை (மேற்கு) – எம்.எம்.பாபு
  • தென் சென்னை (மேற்கு) – ரெட்சன் சி. அம்பிகாபதி
  • வடசென்னை (கிழக்கு) – ஜே.கே.ரமேஷ்
  • திருச்சி புறநகர் (தெற்கு) – எம்.ஆர்.ராஜ்மோகன்
  • வடசென்னை (தெற்கு) – டி.மகிழன்பன்
  • சிவகங்கை – ஆர்.வி.ரஞ்சித் குமார்
  • திருநெல்வேலி புறநகர் -என்.சிவலிங்கமுத்து
  • தென்காசி- வி.கே.கணபதி உள்பட 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ்யின் இந்த அறிக்கை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Ops has appointed 14 district secretaries