scorecardresearch

‘இனிமேல் தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு செல்வோம்’: ஓ.பி.எஸ் பேட்டி

“அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற விவகாரத்தில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவை அங்கீகரித்து மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது” – ஓ.பி.எஸ்., தரப்பு

‘இனிமேல் தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு செல்வோம்’: ஓ.பி.எஸ் பேட்டி

அதிமுக பொதுக்குழுவை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதே தவிர எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்று தீர்ப்பில் கூறவில்லை என்று ஓ.பி.எஸ்., தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, “அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற விவகாரத்தில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவை அங்கீகரித்து மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது.

அதை தவிர, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியின் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களை பற்றி உச்ச நீதிமன்றம் தனது தரப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.

மேலும், இந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது”, என்று கூறியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Ops side opinion about supreme court verdict aiadmk case