scorecardresearch

மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞருக்கு நினைவிடம்: குமரி வள்ளுவர் சிலையை விட உயரமாக எழுப்பத் திட்டம்!

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரை, கடலுக்கு நடுவே பிரம்மாண்ட பேனா நினைவுச்சின்னத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி இந்து நாளிதழ் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞருக்கு நினைவிடம்: குமரி வள்ளுவர் சிலையை விட உயரமாக எழுப்பத் திட்டம்!

மறைந்த திமுக தலைவர் , முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றி உள்ளார். இவரின் பங்களிப்பை போன்றும் வகையில் அரசு மெரினாவில் கடலுக்கு நடுவே நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 42 மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்ட பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட சிறிது உயரமாக கட்டப்பட உள்ளது.

இந்த நினைவுச்சின்னம் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது.
தற்போது கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடத்திலிருந்து நினைவுச்சின்னத்திற்கு பாலத்தில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

“முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் பேனா நினைவுச்சின்னம்” அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் CRZ-IA, CRZ-II மற்றும் CRZ-IVA பகுதிகளின் கீழ் வருகிறது. இதற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ரூ.80 கோடி மதிப்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில், ரூ. 39 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: T n proposes monument off marina beach in honour of karunanidhis contribution to tamil literature