Advertisment

Tamil Nadu assembly today updates : சட்டசபையில் முதல்வரை புகழ்ந்த எதிர்க்கட்சி துணை தலைவர்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இதில் சதி எதுவும் இல்லை. தமிழக அரசு 69 சதவீதம் இட ஒதுக்கீடு கொள்கையில் ஆடாமல் அசையாமல் உள்ளது. இதற்கு ஜெயலலிதா சட்டப் பாதுகாப்பு பெற்று தந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்

Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்

Tamil Nadu Assembly Session : முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களை ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் . எங்களை பொறுத்தவரை மத்திய அரசு கூறியதை சபைக்கு தெரிவிக்கிறோம். அதனால் அதை ஆதரிக்கிறோம் எதிர்க்கிறோம் என்பது எல்லாம் கிடையாது. இதில் என்னவென்றால் 1000 இடங்கள் வருகிறது என்றால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 150 இடங்கள் போய் விடும். மீதமுள்ள 850 இடங்களில் 264 இடங்கள் பொதுப் பிரிவிற்கு ஒதுக்கப்படும். மீதி 586 இடங்கள் 69 சதவீத ஒதுக்கீட்டில் வரும். இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து பேசி அனைவருடைய கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்கும். என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Advertisment

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில், புதிதாக, 81 பாடப்பிரிவுகள் துவங்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்தார்.

சென்னை மாநில கல்லுாரி மகளிர் விடுதி புதுப்பித்தல், பராமரித்தல் பணிகள் மட்டுமின்றி, கூடுதலாக, புதிய மகளிர் விடுதி கட்டடம், 9.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.  கோவை, பாரதியார் பல்கலையில், நிர்வாகம், நிதி, பாடத்திட்டம், தேர்வுகள் போன்ற செயல்பாட்டு பிரிவுகளின், தகவல் தேவைகள் ஒருங்கிணைப்பிற்கு, 1.15 கோடி ரூபாய் செலவிடப்படும்என, உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்தார்.

 

Live Blog

Tamil Nadu Assembly Session Today News:  சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.














15:22 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Latest News : சட்டசபையில் முதல்வரை புகழ்ந்த எதிர்க்கட்சி துணை தலைவர்

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து அசந்துவிட்டதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

12:52 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Today News Live : எந்த கேள்விக்கும் பதிலளிக்க முதல்வர் தயார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

முதல்வர் துறை சார்ந்த கேள்விகள், கேள்வி நேரத்தில் இடம் பெறாதது ஏன்? என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது, எந்த கேள்விக்கும் பதிலளிக்க முதல்வர் தயாராக உள்ளதாக கூறினார்.

12:11 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Debates : ஹைட்ரோ கார்பன் அனுமதி விவகாரம் - சட்டசபையில் திமுக , அதிமுக காரசார விவாதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக தான் அனுமதி அளித்தது. அந்த அனுமதியை அதிமுக தலைமையிலான  அரசு தான் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில், திமுக மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக சட்டசபையில், சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

உடனே எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் - இயற்கை எரிவாயு திட்ட ஆய்விற்கான உரிமத்தை மட்டும் திமுக வழங்கியதே தவிர, இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

இவ்வாறு, சட்டசபையில், திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடந்தது

12:04 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly News Live : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை : அமைச்சர் சி.வி.சண்முகம்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல், திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

11:29 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Today News Live : தகுதி அடிப்படையில் பட்டா : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

10:58 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly News Live : கஜா புயலில் சிக்கிய 90 சதவீத மரங்கள் அகற்றப்படவில்லை - திமுக எம்எல்ஏ அன்பழகன்

கஜா புயலில் சிக்கி சேதத்திற்கு உள்ளான வனத்துறைக்கு சொந்தமான 2 லட்சம் மரங்களில் 90 சதவீத மரங்கள் அகற்றப்படவில்லை என்று கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தார்.இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மரம் விழுந்த இடங்களில் விதைகள் தூவும் பணி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

10:50 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly News In Tamil :வேலூரில் புதிய விளையாட்டு மைதானம் – அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சட்டசபையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலூரில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று தெரிவித்தார்.

09:47 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Today News Live : திமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்

ஹைட்ரோ கார்பன் திட்டம், உயர் மின்கோபுர திட்டம் தொடர்பாக, சட்டசபையில், திமுக இன்று (ஜூலை 3ம் தேதி) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளது.

09:33 (IST)03 Jul 2019





















Tamil Nadu Assembly Meeting :கல்வராயன் மலையில் சுற்றுலா வசதி

கல்வராயன் மலையில், கொடுவந்துறை மேகம் நீர்வீழ்ச்சி பகுதியில், அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன் கோரிக்கை விடுத்தார்.கல்வராயன் மலை, கள்ளக் குறிச்சியிலிருந்து, 30 கி.மீ., தொலைவிலும், சங்கராபுரத்திலிருந்து, 50 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.

09:10 (IST)03 Jul 2019





















காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தினமும் பேச அனுமதி

சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், காங்கிரஸ் கட்சியினர் பேச, இதுவரை அனுமதி வழங்கப்பட்டது. இம்முறை, அந்த வாய்ப்பை குறைத்து உள்ளீர்கள். தமிழக மக்களின் பிரச்னைகளை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வர, காங்கிரஸ் கட்சியினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து, அனைத்து துறை மானிய கோரிக்கையிலும், பேச அனுமதிக்க வேண்டும் என்று  ராமசாமி பேசினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர், தனபால் கூறியதாவது:சட்டசபை கூட்டத்தை, தினமும் மதியம், 2:30 மணிக்குள் முடிக்க வேண்டும் என, அலுவல் ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்திய தால், உங்களுக்கு, 10 துறைகளின் மானிய கோரிக்கை மீது பேச, அனுமதி அளிக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டீர்கள். தற்போது, கூடுதல் நேரம் கேட்கிறீர்கள். அனைவரும் உங்களுக் காக வலியுறுத்துவதால், தினமும் பேச, 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதற்குள் பேசி முடிக்க வேண்டும்.என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

09:06 (IST)03 Jul 2019





















பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறித்து பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ்

மாணவர்களின் வருகை குறித்து, பெற்றோருக்கு, மொபைல் போனில் குறுந்தகவல் அனுப்பும் திட்டம், 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நாட்குறிப்பேடுகள் வழங்கப்படும். துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 3 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்படும். பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 1.17 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை போலவே, தமிழகத்திலும், ஆர்.டி.இ., சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கர்நாடக மாநிலத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.அதன்படி, 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள், அரசு பள்ளிகள் இருக்கும்பட்சத்தில், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில், இந்த சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.இது குறித்து, நாங்களும் ஆலோசித்து வருகிறோம். விரைவில், அமைச்சரவையில் முடிவு எடுத்து, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Tamil Nadu Tamil Nadu Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment