வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுடைய விமர்சனம் குறித்து சமூக ஊடகங்களில் என்னமாதிரியான எதிர்வினைகள் ஆற்றப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தயவில்தான் வைகோ எம்.பி-யாகி இருக்கிறார் அதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதற்கு வைகோ காங்கிரஸ் தயவில் நான் எம்.பி-யாக வில்லை. ஒரு இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ் என்று பதிலடி கொடுத்தார். வைகோவுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக முத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வைகோவை நம்பர் 1 துரோகி என்றும் நன்றி மறந்தவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். இப்படி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
@anuragteddy
Mr.Vaiko,
Please RETURN Back our Congress Rajya sabha Votes. pic.twitter.com/7JteEL6sbx— CHOWKIDAR Chor Hai* A.M.S.DIRAVIA RAJ (@ADiravia) August 9, 2019
வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.
வைகோ கட்டுப்படுத்துவதற்கு சிக்கலான மனிதர். அடுத்த 6 ஆண்டுகளுக்கு கடினம்தான் என்று பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டுள்ளார்.
Vaiko is a difficult person to control. For the next six years. Tough. https://t.co/iTqoZTqmQN
— Badri Seshadri (@bseshadri) August 8, 2019
அதே போல, வைகோவுக்கு திமுக அளித்த வாய்ப்பை அவர் வீனடித்துவிடுவார் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், சிலர் வைகோ காங்கிரஸை குற்றம் சாட்டுவதற்கு முன்பு ராஜபக்சேவை திமுக காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்கள் இலங்கை சென்று சந்தித்ததை நினைவில் வைத்துக்கொண்டு விமர்சிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும், வைகோ தனது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டையை நிறுத்த வேண்டும் என்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, வைகோ - காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைப் போர் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.