'வலுவான ஆளுமைக்குச் சான்று'- எடப்பாடி பழனிசாமிக்கு தொல். திருமாவளவன் திடீர் வாழ்த்து
உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியாவதற்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி அன்று, அதிமுக பொதுக்குழுவின் முடிவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தனர்.
Advertisment
இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு மீது வழக்கு தொடுத்தார். அதற்கு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Advertisment
Advertisements
இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது.
உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியாவதற்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே", என்று தெரிவித்துள்ளார்.
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMKpic.twitter.com/0bpB5Juw4e