scorecardresearch

புதிதாக 62 நிலவுகள் கண்டுபிடிப்பு: மீண்டும் ‘கிங் ஆப் மூன்’ ஆக மாறிய சனி கிரகம்

Saturn becomes ‘King of Moons’ again: புதிததாக 62 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சனி கிரகத்தில் மொத்தம் நிலவுகளின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

Penumbral lunar eclipse on May 5
Saturn Moons

சனி கிரகத்தில் புதிததாக 62 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த கிரகத்தில் மொத்தம் நிலவுகளின் எண்ணிக்கை 83-ல் இருந்து 145 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ‘கிங் ஆப் மூன்ஸ்’ (King of Moons)என்ற பெயரும், நமது சூரிய மண்டலத்தில் 100க்கும் மேற்பட்ட நிலவுகளை கொண்ட கிரகம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

92 நிலவுகளுடன் சமீபத்தில் சனியை முந்தி முதலிடத்திற்கு சென்ற வியாழன் கோளை மீண்டும் 2-வது இடத்திற்கு தள்ளியுள்ளது. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் சனி கிரகத்தில் புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. ஷிஃப்ட் மற்றும் ஸ்டேக் நுட்பத்தைப் பயன்படுத்தி சனியின் சுற்றுப்புறங்களை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த முறை நெப்டியூன் மற்றும் யுரேனஸைச் சுற்றியுள்ள நிலவுகளை தேடப் பயன்படுத்தியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சந்திரன் வானத்தில் நகரும் விகிதத்தில் தொடர்ச்சியான படங்களை மாற்றுவது, எல்லா தரவையும் ஒன்றிணைக்கும் போது சந்திரனின் சமிக்ஞையை மேம்படுத்துகிறது என்று கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: 62 new moons found as saturn becomes 1st planet with over 100 such satellites

Best of Express