Advertisment

3 மாதங்களில் 9 யானைகள் பலி; கோவையில் தொடரும் அவலம்

குண்டு வெடித்ததில் வாய் பகுதி கிழிந்த நிலையில் 10 வயது மதிக்கத் தக்க பெண் யானை 3 வாரங்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ள இயலாமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Viral video, trending viral video, elephant viral videos

கோவை மற்றும் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் மூன்று மாதங்களில் 9 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த யானைகளின் மீது நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில் இரண்டு யானைகள் கடந்த ஆண்டு இறந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத மதிய உணவு வளாகத்தில் ஒரு யானையும், போளூவாம்பட்டி வனச்சரகத்தில் ஒரு யானையும் இவ்வாறு கடந்த ஆண்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

Advertisment

கோவையில் 6 யானைகளும் பொள்ளாச்சியில் 6 யானைகளும் என்று மொத்தமாக 9 யானைகள் உயிரிழந்துள்ளன. 2020ம் ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கோவையில் மட்டும் அதிகபட்சமாக 22 யானைகள் உயிரிழந்துள்ளன. அதே போன்ற ஒரு நிலை இந்த ஆண்டும் தொடரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

12 மற்றும் 15 வயது மதிக்கத்தக்க யானைகள் இரண்டு வாரப்பாளையம் என்ற பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. தடாகம் பள்ளத்தாக்கு அருகே ஒரு யானை அவுட்டுக்காயை உணவாக உட்கொண்டுள்ளது. வயலுக்குள் யானைகள் நுழையக் கூடாது என்று பழங்களில் வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டு அவுட்டுக்காய் என்று கூறப்படுகிறது. இந்த குண்டு வெடித்ததில் வாய் பகுதி கிழிந்த நிலையில் 10 வயது மதிக்கத் தக்க பெண் யானை 3 வாரங்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ள இயலாமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் தலையீடுகளால் ஏற்பட்ட மூன்று யானைகளின் உயிரிழப்புக்கு காரணமான நபர்களை இன்னும் வனத்துறையினர் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. விலங்குகளுக்கு மத்தியில் ஏற்படும் போட்டி மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளும், வயோதீகத்தாலும் ஏற்படும் உயிரிழப்புகாளும் மிகவும் இயல்பானவை. ஆனால் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாகிவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment