காற்றின் வேகம் மற்றும் திசைகளை நேரடியாக அளவிட விண்வெளிக்கு அனுப்பபட்ட முதல் செயற்கைக் கோள். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ஏயோலஸ் ( Aeolus) அதன் பணியை நிறைவு செய்ததையடுத்து இந்த வாரம் பூமிக்கு திரும்புகிறது. பாதுகாப்பாக தரையிறக்க விஞ்ஞானிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் அதன் பணியை முடித்த பின்னர் ஜூன் 19 முதல் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 320 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து வருகிறது. ஜூலை 24, திங்கட்கிழமை 280 கிலோ மீட்டரை எட்டியவுடன், ESA மிஷன் ஆபரேட்டர்கள் Aeolus இன் கடைசி எரிபொருளைப் பயன்படுத்தி, செயற்கைக் கோளை மெதுவாக நமது கிரகத்திற்குத் திரும்பச் செல்ல உதவும் பல முக்கியமான சுற்றுப்பாதை மாறுதல்களின் முதல் செயலைச் செய்தனர்.
கடைசி சுற்றுப்பாதை தரையிறக்கம் ஜூலை 28 வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆபரேட்டர்கள் செயற்கைக்கோளை 150 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் வரை வழிநடத்துவார்கள். இந்த நேரத்தில், செயற்கைக் கோள் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கும். 80 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக் கோள்கள் இருக்கும் போது பெரும்பாலான செயற்கைக் கோள்கள் எரிந்துவிடும். சில துண்டுகள் பூமியின் மேற்பரப்பை அடையும்.
அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர பகுதியில் மீதமுள்ள செயற்கைக் கோளின் பாகங்களை விழுகச் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஏயோலஸ் என்றால் கிரேக்க புராணங்களில் காற்றைக் காப்பவர் என்று பொருள். அதன் படி காற்று வேகம் மற்றும் திசைகளை நேரடியாக அளவிடுவதற்காக அனுப்பபடும் இந்த திட்டத்திற்கும் ஏயோலஸ் பெயர் வைக்கப்பட்டது. இது விஞ்ஞானிகள் உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த அனுமதித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”