scorecardresearch

புதுவையில் செயற்கைக் கோள் செயல்பாடு, விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப் பயிற்சி

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் செயற்கைக் கோள் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து நேரடி விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுவையில் செயற்கைக் கோள் செயல்பாடு, விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப் பயிற்சி

அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் செயற்கைக் கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நேரடி விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை அமைப்பாளர் சேக் சலீம் தலைமையில் நடைபெற்ற விழாவில், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் முனைவர். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் நேரு கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தமிழர் களம் அமைப்பு மாநில செயலாளர் அழகர், தன்னார்வலர் ஓம் சக்தி ரமேஷ் உள்பட பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Abdul kalam foundation conducts camp for school students on satellite and its process