Advertisment

சந்திரயான்- 3: திக் திக் 15 நிமிடங்கள்; 'எல்லாம் ஏ.ஐ, கம்ப்யூட்டர் லாஜிக் கையில்'; விவரம் என்ன?

ஏ.ஐ, கம்ப்யூட்டர் லாஜிக் பயன்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan 3

Chandrayaan 3

ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கும் முயற்சியை ISTRAC மற்றும் மிஷன் இயக்குனர் பி. வீரமுத்துவேல் உட்பட மிஷன் விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கும் அதே வேளையில், விஷயங்கள் தவறாக நடந்தால் அவர்களால் எந்த தலையீடும் செய்ய முடியாது. ஏனெனில் 15 நிமிட தரையிறங்குதல் செயல்முறை அனைத்தும் கம்ப்யூட்டர் லாஜிக் செய்யப்பட்டு அவை லேண்டரின் கணினிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

"ISTRAC பெங்களூரு தளத்தில் இருந்து விண்கலத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து கட்டுப்படுத்துவோம்" என்று சந்திரயான் 3 திட்ட இயக்குநர் பி வீரமுத்துவேல் ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டபோது தெரிவித்தார்.

லேண்டர் சாஃப்ட் லேண்டிங் செய்வது தான் திட்டத்தின் பிரதான நோக்கம் என்று கூறினார். பெங்களூருவில் உள்ள பணிக் கட்டுப்பாடு, பெங்களூருவில் உள்ள ஆழமான விண்வெளி வலையமைப்பு, அமெரிக்காவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நிலையம் அல்லது சந்திரயான் 2 ஆர்பிட்டர் வழியாக சந்திரயான் 3 லேண்டர் நேரடியாக தரை நிலையங்களுக்கு அனுப்பும் சமிக்ஞைகளின் தரவைப் பெறும். திங்களன்று சந்திரயான் 3 தொடர்பை ஏற்படுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஆகஸ்ட் 23 மாலை 17:47 மணிநேரத்தில் இருந்து 18:04 மணிநேரத்தில் லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் எவ்வித கட்டளைகளையும் லேண்டருக்கு அனுப்ப முடியாது. சாராம்சத்தில் சந்திரயான் 3 லேண்டர் "பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம்" செய்ய அதன் திட்டமிடப்பட்ட AI ஐப் பயன்படுத்த வேண்டும்.

“சந்திரயான் 3 இன் மையமானது அதன் சென்சார்கள். உங்களிடம் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஒன்று இருந்தால், அதன் இருப்பிடத்தை உணரும் திறன், அதன் வேகம் என்ன, நோக்குநிலை என்ன என்பதைப் பொறுத்தது. இந்த நோக்கத்திற்காக வெவ்வேறு சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. லேண்டரின் வேகம் மற்றும் உயரத்தைக் குறிக்கும் வேகமானிகள் மற்றும் அல்டிமீட்டர்கள் உள்ளன,” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் சமீபத்தில் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment