பூமியில் உள்ள நீர் எவ்வளவு பழமையானது என்று தெரியுமா?

பூமியில் உள்ள நீர் சூரியனை விட பழமையானதாக இருக்கலாம் என ஆய்வு கூறியுள்ளது.

பூமியில் உள்ள நீர் எவ்வளவு பழமையானது என்று தெரியுமா?

இயற்கை மிகவும் அழகானது. மலை, நீர், மரங்கள், பறவைகள் என இனிமையானதாக இருக்கும். இயற்கை எப்போதும் ஆச்சரியத்தை தரும். நமக்கு தெரியும் பூமியில் கிட்டதிட்ட 70% நீர் உள்ளது என்று. அந்த வகையில் பூமியில் உள்ள நீர் சூரியனை விட பழமையானதாக இருக்கலாம் என ஆய்வு கூறியுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை உருவாக்கும் வட்டு V883 ஓரியோனிஸைச் சுற்றி நீர் இருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை ஆய்வு செய்ததில் நமது கிரகத்தில் உள்ள நீர் சூரியனை விட பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை கண்டறிய வானியலாளர்கள் பெரிய மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் வரிசையை (ALMA) பயன்படுத்தினர். அவர்கள் கண்டுபிடித்த நீர் ஒரு இரசாயன கையொப்பத்தைக் கொண்டுள்ளது, இது நட்சத்திரத்தை உருவாக்கும் வாயு மேகங்களிலிருந்து கிரகங்களுக்கு நீரின் பயணத்தை விளக்குகிறது. பூமியில் உள்ள நீர் சூரியனை விட பழமையானது என்ற கருத்தையும் இது ஆதரிக்கிறது.

ஐரோப்பிய ஆராய்ச்சி குழு, (ESO) இந்த ஆய்வுவை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு V883 ஓரியோனிஸைச் சுற்றியுள்ள நீரின் இரசாயன கையொப்பங்களை அளவிட அல்மாவைப் பயன்படுத்தியது.

பொதுவாக, நீரில் 1 ஆக்ஸிஜன் ஆட்டம், 2 ஹைட்ரஜன் ஆட்டம் (Atom) இருக்கும். ESO ஆராய்ச்சியாளர்கள் தண்ணீரின் கனமான பதிப்பை ஆய்வு செய்கின்றனர், அங்கு ஹைட்ரஜன் அணுக்களில் ஒன்று டியூட்டீரியத்தால் மாற்றப்படுகிறது, இது ஹைட்ரஜனின் கனமான ஐசோடோப்பு ஆகும்.

சாதாரண நீர் மற்றும் இந்த வகையான கனமான நீர் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உள்ளது. இதன் பொருள் இரண்டுக்கும் இடையே உள்ள விகிதத்தைப் பயன்படுத்தி நீர் எப்போது, ​​எங்கு உருவானது என்பதைக் கண்டறியலாம்.

எடுத்துக்காட்டாக, சூரிய குடும்பத்தில் உள்ள சில வால்மீன்களில் உள்ள நீர் மற்றும் கன நீர் விகிதம் பூமியில் உள்ள தண்ணீரைப் போன்றது. வால்மீன்கள் நமது கிரகத்திற்கு தண்ணீரை வழங்கியிருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி, மேகங்களிலிருந்து இளம் நட்சத்திரங்களுக்கும், பின்னர் வால்மீன்கள் மற்றும் கிரகங்களுக்கும் நீரின் பயணம் முன்பு கவனிக்கப்பட்டது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு வரை, விஞ்ஞானிகள் இளம் நட்சத்திரங்களுக்கும் வால் நட்சத்திரங்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிவது கடினமாக இருந்தது என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: All the water on earth could be older than the sun says study

Exit mobile version