நார்வே நாட்டு கணிதவியல் அறிஞர் நில்ஸ் ஹென்ரிக் ஏபெல் என்பவரின் 200ம் ஆண்டு பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக 2002ம் ஆண்டில், கணிதவியல் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஏபெல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய ஆண்டுக்கான விருது, இயற்கணிதம், ஜியோமெட்ரிக் பிரிவின் கட்டமைப்பில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் அமெரிக்க கணிதவியல் அறிஞர் டென்னிஸ் பார்னெல் சல்லிவனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரப்பர் ஷீட் ஜியோமெட்ரிக் என்று வழங்கப்படும் டோப்போலாஜி பிரிவு 19ம் நூற்றாண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. சிதைந்தாலும் மாறாத மேற்பரப்புகளின் பண்புகளைப் பற்றி இந்த துறை விளக்குகிறது. இவருக்கு 7.5 மில்லியன் நார்வே க்ரோனெர் பரிசாக வழங்கப்பட்டது.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொட்ட தென் துருவம்… எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
இந்த பரிசை நார்வே நாட்டின் சயன்ஸ் அண்ட் லெட்டர்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கணிதத்துறையில் சிறந்து செயல்படும் நபர்களுக்கு உலகளாவிய அங்கிகாராத்தை வழங்கும் விருதுகளாக ஏபெல் மற்றும் தி ஃபீல்ஸ்ட்ஸ் மெடல் விருதுகள் கருதப்படுகிறது. தி ஃபில்ட்ஸ் ஆஃப் மெடல் விருது கணித துறையில் 40 வயதிற்கும் குறைவான சாதனையாளர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது. ஆனால் ஏபெல் பரிசு வயதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்து வயதினரின் பங்களிப்பையும் மதிப்பீடு செய்து விருதினை வழங்குகிறது.

2003ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்ரீநிவாஸ் எஸ்.ஆர். வரதனுக்கு 2007ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பரிசைப் பெற்றவர்களில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் கரென் கெஸ்குல்லா உஹ்லான்பெக் அறிஞர் ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரக் கூட்டங்களை பிரதிபலிக்கும் கோவில்கள்; ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் மோட்யா துறைமுகம்
நில்ஸ் ஹென்ரிக் ஏபெல் வாழ்வும், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் அவரின் பங்கும்
ஏபெலின் வாழ்க்கை குறித்து ஏபெல் ப்ரைஸ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் அவரின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 250 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த இயற்கணிதத்தில் உள்ள ஐந்தினை சமன்பாட்டிறகு (quintic equation) தன்னுடைய 22வது வயதில் முழுமையாக தீர்வு கண்டுபிடித்தார்.
வெப்ப உயர்வை தாங்கும் வகையில் தகவமைப்பை மாற்றிக் கொள்ளும் பவளப்பாறைகள் – ஆய்வு முடிவுகள்
பாரிஸில் 1826ம் ஆண்டு தன்னுடைய தியரத்தை சமர்பித்தார். பின்னாளில் அந்த கண்டுபிடிப்பின் ஆவணங்கள் தொலைந்து போக, அதை தேடி திரியும் போது காசநோயால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்து மூன்றூ ஆண்டுகள் ஆன நிலையில் காணமல் போன ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வெறும் 26 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த ஏபெலின் அன்றைய கண்டுபிடிப்பு தான் இன்றைய சி.டி. ஸ்கேன் செயல்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது. ECC-cryptography-க்கும் இவரின் கணித கண்டுபிடிப்பே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “