அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகள் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் முறையாக ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்தால் உருவாகப்பட்ட சந்திர லேண்டர் இம்மாதம் விண்வெளிக்கு அனுப்பபடுகிறது. அதோடு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
JUICE மிஷன்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வியாழன் (Jupiter) மற்றும் அதன் மூன்று நிலவுகளான கேனிமீட், காலிஸ்டோ மற்றும் யூரோபாவை ஆய்வு செய்ய ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் (JUICE) மிஷன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வியாழனின் சிக்கலான சூழலை ஆழமாக ஆராய்ந்து வியாழனின் அமைப்பைப் ஆய்வு செய்யும். JUICE மிஷன் ஏப்ரல் 13-ம் தேதி ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டின் பிரெஞ்சு கயானாவில் உள்ள குரோவில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
தனியார் சந்திர லேண்டர்
ஜப்பானைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐஸ்பேஸ், சந்திர லேண்டரை உருவாக்கி அனுப்பியுள்ளது. HAKUTO-R எனப்படும் இந்த சந்திர லேண்டர் முதல் தனியார் நிலவு லேண்டராகும். HAKUTO-R மிஷன் 1 சந்திர லேண்டர் மார்ச் கடைசி வாரத்தில் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. சந்திர லேண்டர்கள் மற்றும் ரோவர்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம், ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா மற்றும் ஐக்கிய அரபு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த லேண்டரைஉ ருவாகக்கியுள்ளது.
இந்த லேண்டர் இம் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்டபடி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ஷிப்பின் முதல் பயணம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி தனது முதல் பயணத்தை தொடங்க தயாராக உள்ளது. சூப்பர் ஹெவி ராக்கெட்டானது 120 மீட்டர் உயரம், 33 என்ஜின்களை கொண்டுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) கூற்றுப்படி ராக்கெட் ஏப்ரல் 10-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil